»   »  சிறுத்தையை பார்த்து மிரண்ட சிங்கம்... தீரன் பற்றி சூர்யா என்ன சொன்னார் தெரியுமா?

சிறுத்தையை பார்த்து மிரண்ட சிங்கம்... தீரன் பற்றி சூர்யா என்ன சொன்னார் தெரியுமா?

Posted By: Shyam
Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்த்தி நடிப்பில் வெளியாகி இருக்கும் தீரன் படம் குறித்து நடிகர் சூர்யா புகழ்ந்து பேசி இருக்கிறார். படத்தை பார்த்து மிரண்டுவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

கார்த்தி நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கி வெளியாகி உள்ளது தீரன் படம். முதல் நாளில் இருந்து படத்திற்கு மிகவும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Surya talks about Karthi and Theeran film

இந்த நிலையில் இந்த படத்தை பார்த்துவிட்டு நடிகர் சூர்யா தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது நிஜ சம்பவம் என்பதால் உண்மையான ஹீரோக்களான போலீஸ்களை அவர் பாராட்டி இருக்கிறார்.

அதில் ''ஜாங்கிட் சாருக்கும் அவருடன் வேலை பார்த்த 300 போலீஸ் அதிகாரிகளுக்கும், அவர்களின் 11 வருட உழைப்புக்கும் வாழ்த்துகள்'' என்றார்.

மேலும் அவர் தீரன் குறித்து கூறும்போது '' வினோத், கார்த்தி முக்கியமா டிரிம் வாரியார் பிக்சர்ஸ் உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி. நீங்க போலீஸோட தைரியமான பக்கத்தை படமாக்கி இருக்கீங்க'' என்று பாராட்டி கூறியுள்ளார்.

English summary
Surya talks about Karthi and Theeran film. He says it is a raw n bold truth coming alive in a film with such an impactful and realistic approach in tamil cinema.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil