»   »  சாதிக்காததை சாதிக்க வேண்டும் - சூர்யாவின் 20வது ஆண்டு லட்சியம் இது!

சாதிக்காததை சாதிக்க வேண்டும் - சூர்யாவின் 20வது ஆண்டு லட்சியம் இது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் சூர்யா தன் திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 20 ஆண்டுகாலப் பயணம் குறித்து அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை:

"என்னுடைய கடந்த 20 வருட சினிமா வாழ்க்கை என்பது சாதிக்காததை சாதிக்க வேண்டும் என்பதுதான். உங்களுடைய கரகோஷங்கள் எனக்கு மிகப்பெரிய உத்வேகத்தைத் தந்தன. உங்களுடைய பாராட்டுக்கள் என்னுடைய தரத்தை உயர்த்திக்கொள்ள உதவியாக இருந்தன.

நீங்கள் தப்பு என்று எனக்கு சுட்டிக் காட்டிய விஷயங்கள் எனக்கு நல்ல படிப்பினையாக இருந்தன. உங்கள் ஆதரவு என்னை சினிமாவைத் தாண்டிப் பயணிக்க வைத்தன( Agaram Foundation ).

Surya thanked his fans

எல்லாவற்றையும் தாண்டி உங்கள் அன்பு தான் என்னுடைய என்ஜின் வேகமாக ஓட முக்கிய காரணம்... என்னுடைய கடந்த 20வருட பயணத்தை நான் உங்களுக்கு சமர்பிக்கிறேன். இன்னும் பல மைல்கள் தாண்டி பயணிக்க வேண்டியுள்ளது... அனைவருக்கும் நன்றி...!

Read more about: surya, சூர்யா
English summary
Actor Surya has thanked his fans for helping him to entering 20th year in film career
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil