சூர்யா...திரிஷா...செல்வா!

By Staff


செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சூர்யாவும், திரிஷாவும் நடிக்கவுள்ளனர். போக்கிரி படத்தைத் தயாரித்த கனகரத்னா மூவிஸ்தான் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது.

Click here for more images

போக்கிரி படத்தைக் கொடுத்த கனகரத்னா மூவிஸ் ரமேஷ்பாபு புதிதாக ஒரு படம் தயாரிக்கவுள்ளார். இதில் சூர்யாவும், திரிஷாவும் ஜோடி போடுகிறார்கள். மெளனம் பேசியதே, ஆறு ஆகிய படங்களுக்குப் பிறகு இருவரும் இணையும் 3வது படம் இது.

இப்படத்தை செல்வராகவன் இயக்கவுள்ளார். தற்ேபாது செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படத்தை இயக்கி வருகிறார். இதில் சூர்யாவின் தம்பியான கார்த்திதான் நாயகன் என்பது நினைவிருக்கலாம். ரீமா சென் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இதை முடித்து விட்டு இந்தியில் இரண்டு படங்களை (7ஜி ரெயின்போ காலனி மற்றும் புதுப்பேட்டை ரீமேக்) இயக்கவுள்ளார்.

இவற்றை முடித்து விட்டு கனகரத்னா மூவிஸ் படத்திற்கு வருகிறார் செல்வராகவன். அதற்குள் சூர்யா கெளதம் மேனன் இயக்கத்தில் வாரணம் ஆயிரம் படத்தை முடித்து விடுவார். அதன் பின்னர் இருவரும் இணைந்து புதிய படத்தைத் தொடங்குகின்றனர்.

செல்வராகவன் படத்தில் நடிக்க வேண்டும் என்பது சூர்யாவின் கனவாக இருந்து வந்தது. ஆனால் கார்த்தி முந்திக் கொண்டார். இந்த நிலையில்தான் செல்வா படம் சூர்யாவைத் தேடி வந்துள்ளது.

செல்வராகவன் படத்தில் திரிஷா ஏற்கனவே அவர் நடித்துள்ளார். தெலுங்கில் செல்வா இயக்கத்தில் வெளியான அடவரி .. படத்தில் திரிஷாதன் நாயகி. அப்படம் அங்கு பெரும் ஹிட்.

இதற்கிடையே, செல்வராகவன், ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் ஒரு படத்தையும் இயக்கப் போகிறார். இப்படத்தில் விஜய் நாயகனாம்!

செல்வா காட்டில் ஹெவி ரெய்ன்!

More from Filmibeat

Read more about: selvaraagavan surya trisha
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X