‘சிங்கம்’ சினிமாவுக்கு வந்து 18 வருஷமாச்சு...!

சென்னை: சரவணன் என்கிற சூர்யா நடிக்க வந்து இன்றோடு 18 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. இந்த 18 வருட காலத்தில் தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார் சூர்யா.

நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன்தான் சூர்யா. சரவணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் சாதாரணமாக சாதாரண வேலை பார்த்து வந்தவர். சென்னையில் பிறந்தாலும் கோவையில் வளர்க்கப்பட்டவர்.

இன்று நடிகராக, தயாரிப்பாளராக பல்வேறு முகங்களுடன் சூர்யா சிங்க நடை போட்டுக் கொண்டிருக்கிறார் தமிழ்த் திரையுலகில்.

கார்மெண்ட் பேக்டரியில் வேலை...

கார்மெண்ட் பேக்டரியில் வேலை...

சூர்யா நடிக்க வருவதற்கு முன்பு ஒரு கார்மெண்ட் நிறுவனத்தில் 6 மாதம் வேலை பார்த்தார். அப்போது இவர் சிவக்குமாரின் மகன் என்று யாருக்குமே தெரியாது.

வசந்த் படம் மூலமாக...

வசந்த் படம் மூலமாக...

1995ம் ஆண்டு ஆசை படத்தை இயக்கிய வசந்த், அப்படத்தில் கதாநாயகனாக முதலில் சூர்யாவைத்தான் தேர்வு செய்தார். ஆனால் தனக்கு நடிக்க விருப்பமில்லை என்று கூறி அந்த வாய்ப்பை நிராகரிக்கவே அஜீத்தைத் தேடிப் போனது அப்பட வாய்ப்பு.

1997ல் அறிமுகம்...

1997ல் அறிமுகம்...

இதையடுத்து அதே வசந்த் மூலம் 1997ம் ஆண்டு நேருக்கு நேர் படம் மூலமாக நடிகரானார் சூர்யா. அப்படத்தில் சூர்யாவுடன் விஜய்யும் இணைந்து நடித்தார். அப்போது விஜய் சில படங்களில் நடித்த சீனியர். சூர்யாவின் தனிப்பட்ட நண்பரும் கூட.

ஏற்றம் கொடுத்த பிரண்ட்ஸ்...

ஏற்றம் கொடுத்த பிரண்ட்ஸ்...

அதன் பிறகு சில படங்களில் நடித்திருந்தாலும் கூட சூர்யா அழகான ஹீரோ என்ற பெயரை மட்டுமே பெற்றிருந்தாரே ஒழிய ஸ்டார் நடிகராக மாறாமல் இருந்தார். பிரண்ட்ஸ் படம் அவரை சற்று கவனிக்க வைத்த படமாக மாறியது.

தூக்கி விட்ட நந்தா...

தூக்கி விட்ட நந்தா...

ஆனால் நந்தா படம்தான் சூர்யாவின் முகத்தை மாற்றிப் போட்டது. அவரை ஆக்ஷன் ஹீரோவாகவும் மக்கள் முன் கொண்டு நிறுத்தி வெற்றி பெற வைத்தார் இயக்குநர் அமீர்.

பிளாக்பஸ்டர் காக்க காக்க...

பிளாக்பஸ்டர் காக்க காக்க...

அதன் பின்னர் 2003ல் வெளியான காக்க காக்க சூர்யாவை பெரிய ஹீரோக்கள் வரிசையில் தூக்கி அமர வைத்தது. மிகப் பெரிய வெற்றிப் படமாக அது மாறி பாக்ஸ் ஆபீஸைக் கலக்கியது.

பிதாமகன்...

பிதாமகன்...

அதன் பிறகு வந்தது பிதாமகன். இதில் அவருடைய நடிப்பு மிகப் பிரபலமானது. அவருக்கு பிலிம்பேர் சிறந்த துணை நடிகர் விருதையும் பெற்றுக் கொடுத்தது.

கஜினி...

கஜினி...

2005ல் வெளியான கஜினி, சூர்யாவின் நடிப்பின் இன்னொரு பரிமாணத்திற்கு வித்திட்டது. வித்தியாசமான பாத்திரங்களிலும் சூர்யா கலக்குவார் என்பதற்கு இந்தப் படம் சரியான தீனியாக அமைந்தது.

வாரணம் ஆயிரம்...

வாரணம் ஆயிரம்...

2008ல் நடித்த வாரணம் ஆயிரம் சூர்யாவுக்கு இளம் பெண்கள் மத்தியில் ஏகப்பட்ட ரசிகைகளை உருவாக்கிக் கொடுத்தது. நடிப்பு, காதல், அடிதடி, தர லோக்கல், அதிரடி என அனைத்து ரசங்களையும் இப்படத்தில் காட்டியிருப்பார் சூர்யா. இந்தப் படத்திற்காக பல விருதுகளையும் வாங்கிக் குவித்தார் சூர்யா. தேசிய அளவிலும் சிறந்த பொழுது போக்குப் படமாக வாரணம் ஆயிரம் தேர்வு செய்யப்பட்டது. கமல்ஹாசனும் சூர்யாவின் சகலகலா நடிப்பைப் பாராட்டினார்.

இடையே ஒரு கேம் ஷோ...

இடையே ஒரு கேம் ஷோ...

பிசியான நடிப்புக்கு மத்தியில் கேம் ஷோ ஒன்றையும் நடத்தினார் சூர்யா. நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற அந்த விஜய் டிவி நிகழ்ச்சியின் மூலம் சூர்யாவுக்கு மேலும் ரசிகர்கள் கூடினர்.

மிரட்டிய சிங்கம்...

மிரட்டிய சிங்கம்...

சூர்யாவுக்கு மிகப் பெரிய ஸ்டார் அந்தஸ்தை வாங்கிக் கொடுத்த படம் சிங்கம். ஹரி இயக்கத்தில் இரண்டு சிங்கங்கள் வந்து விட்டன. இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட்.

நடிப்போடு சேவையும்....

நடிப்போடு சேவையும்....

நடிப்போடு சமூக சேவையிலும் சத்தம் போடாமல் ஈடுபட்டு வருகிறார் சூர்யா. ரத்ததானம் உள்பட பல சேவைகளில் அவர் ஈடுபடுகிறார். அவரது அகரம் பவுண்டேஷன் மூலம் கல்விச் சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். இதுதவிர சிவக்குமார் அறக்கட்டளை மூலமும் உதவிகள் செய்கிறார். எத்தனை செய்கிறார் என்ற கணக்கே இல்லாமல் தேவைப்படுவோருக்கு எல்லாம் உதவி செய்து வருகிறார் சூர்யா.

நடிகராக மட்டுமல்லாமல், அழகிய மனைவி, 2 குழந்தைகள் என சீரான, அழகான வாழ்க்கையிலும் சூர்யா ஒரு சராசரி மனிதராக வென்றுள்ளார் என்பதுதான் முக்கியமானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X