பூச்சாண்டி... தலைப்பை ஏற்பாரா சூர்யா?

By Mathi

Surya - Venkat Prabhu's new movie title Poochandi?
அஞ்சான் படத்துக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார் அல்லவா... இந்தப் படத்துக்கு பூச்சாண்டி என தலைப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் இந்தத் தலைப்பு உறுதியானதல்ல... இதுபற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சூர்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சூர்யா - லிங்குசாமியின் அஞ்சான் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்தவிட்டது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதுப்படத்துக்கு கடந்த மாதமே பூஜையும் போட்டுவிட்டார்கள்.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பல நடிகைகள் பெயர் அடிபட்டு வருகிறது. இப்போதைய நிலவரப்படி நயன்தாரா அல்லது எமி ஜாக்சன் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு 'பூச்சாண்டி' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை இன்னும் வெளியாகவில்லை. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

பூச்சாண்டி என்ற தலைப்பை தன் தம்பி பிரேம்ஜிக்காக முன்பு பதிவு செய்து, அதை இயக்கப் போவதாக அறிவிப்பும் வெளியிட்டார் வெங்கட் பிரபு. ஆனால் அந்தப் படம் நிறுத்தப்பட்டது. கார்த்தியை வைத்து பிரியாணி படத்தை இயக்கினார்.

தலைப்பு விஷயத்தில் மிகவும் கவணமாக இருப்பவர் சூர்யா. அவர் பூச்சாண்டி என்ற தலைப்பை ஏற்பாரா என்பது கேள்விக்குரியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X