பாலா இயக்கத்தில் ரெட்டை வேடத்தில் நடிக்கிறாரா சூர்யா... விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை : நடிகர் சூர்யா 20 ஆண்டுகளுக்கு பிறகு டைரக்டர் பாலாவுடன் இணைந்துள்ளார்.
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது.
படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் இணையவுள்ள நிலையில், படத்தில் சூர்யா இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யா -பாலா கூட்டணி
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா கூட்டணி சிறப்பானதாக அமைந்திருந்தது. பிதாமகன், நந்தா என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்தது. இந்த இரண்டு படங்களும் சூர்யாவின் கேரியரில் சிறப்பான படமாக, அவரது வாழ்க்கைக்கு திருப்புமுனையை கொடுதத படங்களாக அமைந்தன.

சிறப்பான கதைத்தேர்வு
அதுவரை சாக்லேட் பாய் கேரக்டர்களில் நடித்து வந்த சூர்யா, இந்தப் படங்களுக்கு பிறகே தனது முத்திரைகளை கோலிவுட்டில் பதிக்க ஆரம்பித்தார். அடுத்தடுத்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார். தயாரிப்பு நிறுவனத்தையும் துவக்கி சிறப்பான படங்களை தயாரித்தார்.

மீண்டும் கூட்டணி
இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா -பாலா கூட்டணி மீண்டும் தற்போது இணைந்துள்ளது. இதை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தனது தந்தையின் பிறந்தநாளில் இந்த தகவலை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தின்மூலம் உறுதி செய்தார்.

இரட்டை வேடத்தில் சூர்யா
இந்தப் படத்தில் மற்றொரு கேரக்டரில் நடிப்பதற்கு முன்னதாக அதர்வாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இந்தக் கேரக்டரில் சூர்யா நடிக்க ஆர்வம் காட்டிய நிலையில் தற்போது சூர்யா படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாயகியாக கீர்த்தி சுரேஷ்
படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளதாகவும் அவர் வித்தியாசமான கெட்டப்பில் தோன்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மேலும் படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Recommended Video

விரைவில் சூட்டிங்
படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கப்பட்டு, மூன்று மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வாரணம் ஆயிரம் படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பு பெற்றிருந்தார் சூர்யா. இந்நிலையில் தற்போது பாலா இயக்கத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுவது ரசிகர்களுக்கு மிகவும் இனிப்பான செய்தியாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications











