நல்ல கதை இருந்தா சொல்லுங்க... மலையாளத்திலும் நடிக்க ரெடி! - சூர்யா

By Shankar

திருவனந்தபுரம்: நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள்... மலையாளத்திலும் நடிக்க நான் தயார், என்று கூறியுள்ளார் நடிகர் சூர்யா.

சிங்கம் 2 படத்தின் புரமோஷன் வேலைகளில் படு பிஸியாக உள்ளார் சூர்யா.

இந்தப் படம் தெலுங்கில் யாமுடு 2 எனும் பெயரில் வெளியாகிறது. சமீபத்தில் ஹைதராபாதில் வைத்து இந்தப் படத்தின் இசை வெளியிடப்பட்டது. அதில் சூர்யாவும் படத்தின் நாயகி அனுஷ்காவும் பங்கேற்றனர்.

ஆந்திராவில்...

ஆந்திராவில்...

நிருபர்களிடம் சூர்யா பேசுகையில், ''ஆந்திர ரசிகர்கள் எனது படங்களுக்கு ஆரம்பத்திலிருந்தே மிகுந்த வரவேற்பு அளித்து வருகின்றனர். இது மகிழ்ச்சியாக உள்ளது. சிங்கம் படத்தின் தொடர்ச்சியாக சிங்கம்-2 தயாராகியுள்ளது. அந்திராவில் இப்படம் 'யாமுடு-2' என்ற பெயரில் வருகிறது.

போலீஸ் அதிகாரிகள் பாராட்டு

போலீஸ் அதிகாரிகள் பாராட்டு

இது ஒரு நேர்மையான, துணிச்சல் மிக்க போலீஸ் அதிகாரி பற்றிய கதை. இப்படத்தை போலீஸ் அதிகாரிகள் பலருக்கும் போட்டுக் காட்டினோம். அவர்கள் மிகவும் பாராட்டினர்," என்றார் சூர்யா.

சூர்யாவுடன் நடிப்பது மகிழ்ச்சி

சூர்யாவுடன் நடிப்பது மகிழ்ச்சி

நடிகை அனுஷ்கா கூறுகையில், ''சூர்யா மிகச் சிறந்த நடிகர். நானும் அவரும் நடித்த முதல் படமே மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. மீண்டும் அவருக்கு ஜோடியாக நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது,'' என்றார்.

கேரளாவில்...

கேரளாவில்...

கேரளாவில் சிங்கம் 2 தமிழில் நேரடியாக வெளியாகிறது. சூர்யாவின் தமிழ்ப் படங்களுக்கு கேரள ரசிகர்கள் ஏராளம். எனவே திருவனந்தபுரத்திலும் இந்தப் படத்தின் இசையை வெளியிட்டார். அப்போது நிருபர்களிடம் கூறும்போது, ''எனக்கு மலையாளப் படங்களில் நடிக்கவும் விருப்பமாகத்தான் உள்ளது. நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X