சம்பளத்தை உயர்த்திய சூர்யா இதுவரை சம்பள விஷயத்தில் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருந்த சூர்யா தனது ஊதியத்தை தடாலடியாக இரண்டுமடங்காக்கிவிட்டார்.தனுஷ், சிம்பு போன்றவர்கள் எல்லாம் கோடிகளைக் கேட்டு நச்சரித்துக் கொண்டிருக்க, தொடர் வெற்றிகளுக்குப் பிறகும் ரூ. 75லட்சத்திலேயே நின்று கொண்டிருந்தார் சூர்யா.விஜய், விக்ரம் மற்றும் தொடர் தோல்விகள் தந்த அஜீத் ஆகியோரின் சம்பளம் எல்லாம் ரூ. 3, 4 கோடி என்று போய்க்கொண்டிருக்க சூர்யாவோ சம்பளத்தைப் பற்றி யோசிக்காமல் அப்பா மாதிரியே அடக்கம் காட்டி வந்தார். இந் நிலையில் அவரது சம்பளத்தை தானாகவே ரூ. 1 கோடியாக உயர்த்தினார் இயக்குனர் பாலா. கலைப்புலி எஸ்.தாணுவின்உதவியுடன் அவர் தயாரித்த மாயாவி படத்திற்காக சூர்யாவுக்கு 1 கோடி ஊதியம் தரப்பட்டது. அதைக் கூட சூர்யாகேட்கவில்லை. பாலாவும் தாணுவும் தான் வலுக்கட்டாயமாக கையில் திணித்தனர்.இந் நிலையில் கஜினியின் மிகப் பிரமாண்ட வெற்றிக்குப் பின் தனது ஊதியத்தை ரூ. 2 கோடியாக்கியிருக்கிறார் சூர்யா. தன்னைத்தேடி வரும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை பல மடங்காகிவிட்டதாலும், தனக்கு சரியான மார்க்கெட்இருப்பதை சூர்யா தெளிவாக உணர்ந்து கொண்டதாலும் தான் இந்த பணயேற்றமாம்.அதே போல கஜினியை இயக்கிய ஏ.ஆர்.முருகதாசும் தனது ஊதியத்தை ரூ. 2 கோடியாக்கிவிட்டார். ஷங்கருக்கு அடுத்தபடியாகஅதிக சம்பளம் வாங்கும் தமிழ் இயக்குனர் இவராகத் தான் இருப்பார் என்கிறார்கள். தீனா, ரமணா ஆகிய இரு வெற்றிப் படங்களைத் தந்தாலும் அவ்வளவாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத சிம்பிள் மேன்முருகதாஸ். இன்னும் அவர் தன்னை அதே பழைய கள்ளக்குறிச்சிகாராகவே வைத்திருக்கிறார்.ரமணா படத்தைப் பார்த்துவிட்டு சிலிர்த்துப் போன தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, தனக்காக ஒரு படம் பண்ணித் தரும்படிகேட்டிருந்தாராம். இப்போது கஜினியின் வசூல் மழையில் நனைந்தபடியே தெலுங்குக்குப் போகிறார் முருகதாஸ்.சிரஞ்சீவி-த்ரிஷாவை வைத்து ஸ்டாலின் என்ற படத்தை எடுக்க இருக்கிறார். இதுவரை இந்திய ஹீரோக்கள் யாரும் தொடாத ஒருசப்ஜெக்ட்டை தனது ஸ்டாலின் தொடுவார் என்கிறார்.இவரது தீனாவையும், ரமணாவையும், இப்போது கஜினியையும் தங்களை வைத்து தெலுங்கில் எடுத்துத் தரும்படி பல ஹீரோக்கள்கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ரீ-மேக் தனக்கு ஒத்துவராது என்று கூறித் தட்டிக் கழித்துக் கொண்டிருக்கிறார் முருகதாஸ். இவரும் சூர்யாவைப் போலவே சம்பள விஷயத்தில் இத்தனை நாட்கள் அம்மாஞ்சியாகவே இருந்தார். இப்போது தான்விழித்துக் கொண்டு முதன் முதலாக ரூ. 2 கோடி கேட்டு வாங்கியிருக்கிறார் சிரஞ்சீவி படத்துக்காக.அதே போல கஜினியில் நன்றாக நடித்திருந்த ஆசினும் அதன் வெற்றிக்குப் பின் தனது சம்பளத்தை ரூ. 30 லட்சமாகஉயர்த்திவிட்டார். இதுவரை இவர் ரூ. 25 லட்சம் வாங்கி வந்தார்.அடுத்து விக்ரமுடன் நடிக்கும் மஜாவும் விஜய்யுடன் நடிக்கும் சிவகாசியும் ரிலீஸ் ஆன பின்னர் சம்பளம் ரூ. 40லட்சமாகிவிடுமாம். இதனால் கொஞ்சம் அட்வான்ஸ் கொடுத்து இவரது கால்ஷீட்டை வாங்கி வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள்கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்களாம்.

By Staff

இதுவரை சம்பள விஷயத்தில் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருந்த சூர்யா தனது ஊதியத்தை தடாலடியாக இரண்டுமடங்காக்கிவிட்டார்.

தனுஷ், சிம்பு போன்றவர்கள் எல்லாம் கோடிகளைக் கேட்டு நச்சரித்துக் கொண்டிருக்க, தொடர் வெற்றிகளுக்குப் பிறகும் ரூ. 75லட்சத்திலேயே நின்று கொண்டிருந்தார் சூர்யா.

விஜய், விக்ரம் மற்றும் தொடர் தோல்விகள் தந்த அஜீத் ஆகியோரின் சம்பளம் எல்லாம் ரூ. 3, 4 கோடி என்று போய்க்கொண்டிருக்க சூர்யாவோ சம்பளத்தைப் பற்றி யோசிக்காமல் அப்பா மாதிரியே அடக்கம் காட்டி வந்தார்.


இந் நிலையில் அவரது சம்பளத்தை தானாகவே ரூ. 1 கோடியாக உயர்த்தினார் இயக்குனர் பாலா. கலைப்புலி எஸ்.தாணுவின்உதவியுடன் அவர் தயாரித்த மாயாவி படத்திற்காக சூர்யாவுக்கு 1 கோடி ஊதியம் தரப்பட்டது. அதைக் கூட சூர்யாகேட்கவில்லை. பாலாவும் தாணுவும் தான் வலுக்கட்டாயமாக கையில் திணித்தனர்.

இந் நிலையில் கஜினியின் மிகப் பிரமாண்ட வெற்றிக்குப் பின் தனது ஊதியத்தை ரூ. 2 கோடியாக்கியிருக்கிறார் சூர்யா. தன்னைத்தேடி வரும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை பல மடங்காகிவிட்டதாலும், தனக்கு சரியான மார்க்கெட்இருப்பதை சூர்யா தெளிவாக உணர்ந்து கொண்டதாலும் தான் இந்த பணயேற்றமாம்.

அதே போல கஜினியை இயக்கிய ஏ.ஆர்.முருகதாசும் தனது ஊதியத்தை ரூ. 2 கோடியாக்கிவிட்டார். ஷங்கருக்கு அடுத்தபடியாகஅதிக சம்பளம் வாங்கும் தமிழ் இயக்குனர் இவராகத் தான் இருப்பார் என்கிறார்கள்.


தீனா, ரமணா ஆகிய இரு வெற்றிப் படங்களைத் தந்தாலும் அவ்வளவாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத சிம்பிள் மேன்முருகதாஸ். இன்னும் அவர் தன்னை அதே பழைய கள்ளக்குறிச்சிகாராகவே வைத்திருக்கிறார்.

ரமணா படத்தைப் பார்த்துவிட்டு சிலிர்த்துப் போன தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, தனக்காக ஒரு படம் பண்ணித் தரும்படிகேட்டிருந்தாராம். இப்போது கஜினியின் வசூல் மழையில் நனைந்தபடியே தெலுங்குக்குப் போகிறார் முருகதாஸ்.

சிரஞ்சீவி-த்ரிஷாவை வைத்து ஸ்டாலின் என்ற படத்தை எடுக்க இருக்கிறார். இதுவரை இந்திய ஹீரோக்கள் யாரும் தொடாத ஒருசப்ஜெக்ட்டை தனது ஸ்டாலின் தொடுவார் என்கிறார்.

இவரது தீனாவையும், ரமணாவையும், இப்போது கஜினியையும் தங்களை வைத்து தெலுங்கில் எடுத்துத் தரும்படி பல ஹீரோக்கள்கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ரீ-மேக் தனக்கு ஒத்துவராது என்று கூறித் தட்டிக் கழித்துக் கொண்டிருக்கிறார் முருகதாஸ்.


இவரும் சூர்யாவைப் போலவே சம்பள விஷயத்தில் இத்தனை நாட்கள் அம்மாஞ்சியாகவே இருந்தார். இப்போது தான்விழித்துக் கொண்டு முதன் முதலாக ரூ. 2 கோடி கேட்டு வாங்கியிருக்கிறார் சிரஞ்சீவி படத்துக்காக.

அதே போல கஜினியில் நன்றாக நடித்திருந்த ஆசினும் அதன் வெற்றிக்குப் பின் தனது சம்பளத்தை ரூ. 30 லட்சமாகஉயர்த்திவிட்டார். இதுவரை இவர் ரூ. 25 லட்சம் வாங்கி வந்தார்.

அடுத்து விக்ரமுடன் நடிக்கும் மஜாவும் விஜய்யுடன் நடிக்கும் சிவகாசியும் ரிலீஸ் ஆன பின்னர் சம்பளம் ரூ. 40லட்சமாகிவிடுமாம். இதனால் கொஞ்சம் அட்வான்ஸ் கொடுத்து இவரது கால்ஷீட்டை வாங்கி வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள்கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்களாம்.

Read more about: surya increases remuneration
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X