»   »  சூர்யாவை துரத்தும் இந்தி சினிமா கல்வி சேவைக்காக ஒரு கோடி ரூபாய் சொந்தப் பணத்தைப் போட்டு வரும் தமிழ் புத்தாண்டு தினத்தில் அறக்கட்டளைதொடங்குகிறார் நடிகர் சூர்யா.திருச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த நடிகர் சூர்யா நிருபர்களிடம் கூறியதாவது:கோவையில் வரும் ஏப்ரல் 14ம் தேதி (தமிழ்ப் புத்தாண்டு) சூர்யா கல்வி அறக்கட்டளை என்ற அமைப்பை சுமார் ஒரு கோடிரூபாய் மூலதனத்துடன் தொடங்க உள்ளேன். நான் விளம்பர படங்களில் நடிப்பதன் மூலம் வரும் நிதியை இதற்கு ஒதுக்குவேன். இந்த அறக்கட்டளை கல்வி சேவை, சுகாதாரம், குழந்தைகள் நலன் ஆகியவற்றிற்காக பாடுபடும்.தற்போது ஜில்லுன்னு ஒரு காதல் உள்பட 3 படங்களில் நடித்து வருகிறேன். கஜினி தெலுங்கிலும் நன்றாக ஹிட் ஆகி உள்ளதால்,தெலுங்கில் இருந்தும் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. இருந்தாலும் தமிழ் படங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன்.இங்கு எனக்கென தனியிடம் உள்ளபோது வேறெங்கு போவதிலும் விருப்பமில்லை.அதே போல் தற்போது பாலிவுட்டில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் அமீர்கானின் ரங் தே பசந்தியில் நடிக்கும் வாய்ப்பைகஜினி படத்துக்காகத் தான் இழந்தேன். அதில் நடிக்க என்னை அமீர்கான் கூப்பிட்டபோது கஜினிக்காக கால்ஷீட் கொடுத்து, என்கெட்-அப்பையும் மாற்றியிருந்தேன். அதனால் அதில் நடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் இப்போதும் ஹிந்தி படங்களிலும் நடிக்க வாய்ப்புக்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஹிந்தியில் ராம்கோபால் வர்மாவின் படத்தில் நடிக்க தற்போது பேச்சு நடத்தி வருகிறேன். தெலுங்கு, இந்திஎன அழைப்புகள் வந்தாலும் தமிழுக்குத் தான் நான் முக்கியத்துவம் தருவேன்.இங்கு எனக்கென ஒரு இடத்தை மக்கள் கொடுத்திருக்கும்போது புதிதாக எங்கும் போக வேண்டிய தேவை இல்லை.விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் ரசிகர்களை நேரடியாக சந்திக்கவும், அவர்கள் எண்ணங்களை புரிந்து கொள்ளவும்முடிகிறது என்றார் சூர்யா.

சூர்யாவை துரத்தும் இந்தி சினிமா கல்வி சேவைக்காக ஒரு கோடி ரூபாய் சொந்தப் பணத்தைப் போட்டு வரும் தமிழ் புத்தாண்டு தினத்தில் அறக்கட்டளைதொடங்குகிறார் நடிகர் சூர்யா.திருச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த நடிகர் சூர்யா நிருபர்களிடம் கூறியதாவது:கோவையில் வரும் ஏப்ரல் 14ம் தேதி (தமிழ்ப் புத்தாண்டு) சூர்யா கல்வி அறக்கட்டளை என்ற அமைப்பை சுமார் ஒரு கோடிரூபாய் மூலதனத்துடன் தொடங்க உள்ளேன். நான் விளம்பர படங்களில் நடிப்பதன் மூலம் வரும் நிதியை இதற்கு ஒதுக்குவேன். இந்த அறக்கட்டளை கல்வி சேவை, சுகாதாரம், குழந்தைகள் நலன் ஆகியவற்றிற்காக பாடுபடும்.தற்போது ஜில்லுன்னு ஒரு காதல் உள்பட 3 படங்களில் நடித்து வருகிறேன். கஜினி தெலுங்கிலும் நன்றாக ஹிட் ஆகி உள்ளதால்,தெலுங்கில் இருந்தும் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. இருந்தாலும் தமிழ் படங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன்.இங்கு எனக்கென தனியிடம் உள்ளபோது வேறெங்கு போவதிலும் விருப்பமில்லை.அதே போல் தற்போது பாலிவுட்டில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் அமீர்கானின் ரங் தே பசந்தியில் நடிக்கும் வாய்ப்பைகஜினி படத்துக்காகத் தான் இழந்தேன். அதில் நடிக்க என்னை அமீர்கான் கூப்பிட்டபோது கஜினிக்காக கால்ஷீட் கொடுத்து, என்கெட்-அப்பையும் மாற்றியிருந்தேன். அதனால் அதில் நடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் இப்போதும் ஹிந்தி படங்களிலும் நடிக்க வாய்ப்புக்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஹிந்தியில் ராம்கோபால் வர்மாவின் படத்தில் நடிக்க தற்போது பேச்சு நடத்தி வருகிறேன். தெலுங்கு, இந்திஎன அழைப்புகள் வந்தாலும் தமிழுக்குத் தான் நான் முக்கியத்துவம் தருவேன்.இங்கு எனக்கென ஒரு இடத்தை மக்கள் கொடுத்திருக்கும்போது புதிதாக எங்கும் போக வேண்டிய தேவை இல்லை.விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் ரசிகர்களை நேரடியாக சந்திக்கவும், அவர்கள் எண்ணங்களை புரிந்து கொள்ளவும்முடிகிறது என்றார் சூர்யா.

Posted By:
Subscribe to Oneindia Tamil

கல்வி சேவைக்காக ஒரு கோடி ரூபாய் சொந்தப் பணத்தைப் போட்டு வரும் தமிழ் புத்தாண்டு தினத்தில் அறக்கட்டளைதொடங்குகிறார் நடிகர் சூர்யா.

திருச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த நடிகர் சூர்யா நிருபர்களிடம் கூறியதாவது:

கோவையில் வரும் ஏப்ரல் 14ம் தேதி (தமிழ்ப் புத்தாண்டு) சூர்யா கல்வி அறக்கட்டளை என்ற அமைப்பை சுமார் ஒரு கோடிரூபாய் மூலதனத்துடன் தொடங்க உள்ளேன். நான் விளம்பர படங்களில் நடிப்பதன் மூலம் வரும் நிதியை இதற்கு ஒதுக்குவேன்.


இந்த அறக்கட்டளை கல்வி சேவை, சுகாதாரம், குழந்தைகள் நலன் ஆகியவற்றிற்காக பாடுபடும்.

தற்போது ஜில்லுன்னு ஒரு காதல் உள்பட 3 படங்களில் நடித்து வருகிறேன். கஜினி தெலுங்கிலும் நன்றாக ஹிட் ஆகி உள்ளதால்,தெலுங்கில் இருந்தும் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. இருந்தாலும் தமிழ் படங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன்.இங்கு எனக்கென தனியிடம் உள்ளபோது வேறெங்கு போவதிலும் விருப்பமில்லை.

அதே போல் தற்போது பாலிவுட்டில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் அமீர்கானின் ரங் தே பசந்தியில் நடிக்கும் வாய்ப்பைகஜினி படத்துக்காகத் தான் இழந்தேன். அதில் நடிக்க என்னை அமீர்கான் கூப்பிட்டபோது கஜினிக்காக கால்ஷீட் கொடுத்து, என்கெட்-அப்பையும் மாற்றியிருந்தேன்.


அதனால் அதில் நடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் இப்போதும் ஹிந்தி படங்களிலும் நடிக்க வாய்ப்புக்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஹிந்தியில் ராம்கோபால் வர்மாவின் படத்தில் நடிக்க தற்போது பேச்சு நடத்தி வருகிறேன். தெலுங்கு, இந்திஎன அழைப்புகள் வந்தாலும் தமிழுக்குத் தான் நான் முக்கியத்துவம் தருவேன்.

இங்கு எனக்கென ஒரு இடத்தை மக்கள் கொடுத்திருக்கும்போது புதிதாக எங்கும் போக வேண்டிய தேவை இல்லை.

விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் ரசிகர்களை நேரடியாக சந்திக்கவும், அவர்கள் எண்ணங்களை புரிந்து கொள்ளவும்முடிகிறது என்றார் சூர்யா.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil