அஜீத் போய் சூர்யா பாலா இயக்கத்தில் உருவாகவுள்ளதாக ரொம்ப நாட்களாக கூறப்பட்டு வரும் நான்கடவுள் படத்தில் நிடிப்பதாக இருந்த அஜீத் அதிலிருந்து விலகிக் கொண்டு விட்டார்.இதனால் அவருக்குப் பதில் சூர்யா நடிக்கலாம் என்று தெரிகிறது.மிகுந்த தடுமாற்றத்தில் இருந்து வந்த அஜீத்தின் மார்க்கெட் இப்போதுதான்நிலைபெறத் தொடங்கியுள்ளது. பரமசிவன், திருப்பதி என இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ள அஜீத், தொடர்ந்து மார்க்கெட்டைத் தக்க வைத்துக்கொள்ள மிகுந்த கவனத்துடன் உள்ளார்.பாலாவின் இயக்கத்தில் அஜீத் நடிப்பதாக இருந்த நான் கடவுள் மிகுந்த எதிர்பார்ப்பைஏற்படுத்தியிருந்தது. இந்தப் படத்திற்காக நீண்ட தலைமுடியையும் வளர்க்கத்தொடங்கினார் அஜீத்.இடையில் காட்பாதர், பரமசிவன், திருப்பதி என அடுத்தடுத்த படங்கள்குறுக்கிட்டதாலும், பாலா ஸ்கிரிப்டை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டதாலும் நான்கடவுளைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இப்போது நான் கடவுளை மீண்டும் தூசி தட்டி எடுத்துள்ளார் பாலா. ஆனால் அதில்அஜீத் நடிக்கவில்லையாம். இருவருக்கும் இடையே எந்த மோதலும் இல்லை.அஜீத்தே படத்திலிருந்து விலகிக் கொள்வதாக பாலாவிடம் தெரிவித்தாராம்.இந்தப் படம் வேண்டாம், எதிர்காலத்தில் மீண்டும் சேர்ந்து பணியாற்றலாம் என்றுமட்டும் சொல்லி விட்டு அஜீத் விலகியுள்ளாராம்.இதனால் இருவரும் மனக் கசப்பின்றி பிரிந்துள்ளனர். பாலா படத்திலிருந்து அஜீத்விலகியுள்ளது கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நந்தாபடத்திலும் அஜீத்தான் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென விலகிக்கொண்டார் அஜீத்.பிறகு சூர்யா அந்த ரோலில் நடித்தார், அதன் பிறகு நடந்தது சரித்திரம்.இப்போது நான் கடவுள் படத்திலிருந்தும் அஜீத் விலகி விட்டார். இருந்தாலும்திட்டமிட்டபடி படத்தை விரைவில் தொடங்க பாலா முடிவு செய்துள்ளார்.அஜீத்துக்குப் பதில் சூர்யாவே இப்படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது. சூர்யாவும், நான் கடவுள் படத்தின் ஸ்கிரிப்ட் குறித்து ஏற்கனவேகேள்விப்பட்டுள்ளாராம். இப்போது அந்த கேரக்டரில் நடிக்கப் போவது குறித்துரொம்ப சந்தோஷமாகி உள்ளாராம்.ஸோ, சூர்யாவுக்கு இன்னொரு பிரேக்!

By Staff

பாலா இயக்கத்தில் உருவாகவுள்ளதாக ரொம்ப நாட்களாக கூறப்பட்டு வரும் நான்கடவுள் படத்தில் நிடிப்பதாக இருந்த அஜீத் அதிலிருந்து விலகிக் கொண்டு விட்டார்.இதனால் அவருக்குப் பதில் சூர்யா நடிக்கலாம் என்று தெரிகிறது.

மிகுந்த தடுமாற்றத்தில் இருந்து வந்த அஜீத்தின் மார்க்கெட் இப்போதுதான்நிலைபெறத் தொடங்கியுள்ளது. பரமசிவன், திருப்பதி என இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ள அஜீத், தொடர்ந்து மார்க்கெட்டைத் தக்க வைத்துக்கொள்ள மிகுந்த கவனத்துடன் உள்ளார்.

பாலாவின் இயக்கத்தில் அஜீத் நடிப்பதாக இருந்த நான் கடவுள் மிகுந்த எதிர்பார்ப்பைஏற்படுத்தியிருந்தது. இந்தப் படத்திற்காக நீண்ட தலைமுடியையும் வளர்க்கத்தொடங்கினார் அஜீத்.

இடையில் காட்பாதர், பரமசிவன், திருப்பதி என அடுத்தடுத்த படங்கள்குறுக்கிட்டதாலும், பாலா ஸ்கிரிப்டை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டதாலும் நான்கடவுளைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.


இப்போது நான் கடவுளை மீண்டும் தூசி தட்டி எடுத்துள்ளார் பாலா. ஆனால் அதில்அஜீத் நடிக்கவில்லையாம். இருவருக்கும் இடையே எந்த மோதலும் இல்லை.அஜீத்தே படத்திலிருந்து விலகிக் கொள்வதாக பாலாவிடம் தெரிவித்தாராம்.

இந்தப் படம் வேண்டாம், எதிர்காலத்தில் மீண்டும் சேர்ந்து பணியாற்றலாம் என்றுமட்டும் சொல்லி விட்டு அஜீத் விலகியுள்ளாராம்.

இதனால் இருவரும் மனக் கசப்பின்றி பிரிந்துள்ளனர். பாலா படத்திலிருந்து அஜீத்விலகியுள்ளது கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நந்தாபடத்திலும் அஜீத்தான் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென விலகிக்

கொண்டார் அஜீத்.பிறகு சூர்யா அந்த ரோலில் நடித்தார், அதன் பிறகு நடந்தது சரித்திரம்.

இப்போது நான் கடவுள் படத்திலிருந்தும் அஜீத் விலகி விட்டார். இருந்தாலும்திட்டமிட்டபடி படத்தை விரைவில் தொடங்க பாலா முடிவு செய்துள்ளார்.அஜீத்துக்குப் பதில் சூர்யாவே இப்படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.


சூர்யாவும், நான் கடவுள் படத்தின் ஸ்கிரிப்ட் குறித்து ஏற்கனவேகேள்விப்பட்டுள்ளாராம். இப்போது அந்த கேரக்டரில் நடிக்கப் போவது குறித்துரொம்ப சந்தோஷமாகி உள்ளாராம்.

ஸோ, சூர்யாவுக்கு இன்னொரு பிரேக்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X