ஹீரோ .. ஹீரோ ..
ஏ.வி.எம். நிறுவனம் தயாரிக்க உள்ள அடுத்த படத்தில் சூர்யாவும்- ஜோதிகாவும் மீண்டும் இணைகின்றனர். படத்தின் பெயர் இன்னும் முடிவாகவில்லை.
இருவருக்கும் இடையே கிசுகிசு படு உச்சத்தில் இருந்தபோது காக்க.. காக்கவில் இணைந்து நடித்தனர்.
அதில் இருவரும் ஆதர்ஷ தம்பதிகளாகவே வாழ்ந்து காட்டினர். மிக நெருக்கமாகவும் நடித்தனர்.
இந் நிலையில் சமீபத்தில் ஜோதிகாவுடன் காதல் எல்லாம் இல்லை, வீட்டில் பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்வேன் என்று சூர்யா வெளிப்படையாகவே பேட்டி தந்தார்.
மேலும் சூர்யா குறித்து கிரண் ஏதோ கிண்ட, ஜோதிகாவும் கிரணும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் இந்தியில் கெட்ட வார்த்தையில் திட்டிக் கொண்டு சண்டை போட்டுவிட்டுத் திரும்பியதும் செய்தியானது.
கொஞ்ச காலமாக படங்களை ஒதுக்கி வந்த ஜோதிகாவும் சமீப காலமாக நிறைய படங்களை ஒப்புக் கொள்ள ஆரம்பித்துள்ளார்.
இதனால் சூர்யா- ஜோதிகா இடையே காதல் முறிவு என்ற செய்திகள் கோடம்பாக்கத்தில் கசிய ஆரம்பித்துள்ள நிலையில் மீண்டும் இருவரும் சேர்ந்து நடிக்கின்றனர்.
ஏ.வி.எம். ஸ்டுடியோவிலேயே இந்தப் படத்திற்கான பூஜை சில நாட்களுக்கு முன் போடப்பட்டுள்ளது. மலையாளத்தில் வெளியான குஞ்னி கூனன் என்ற படத்தைத் தழுவியே இந்தப் படத்தை எடுக்கப் போகிறார்களாம்.
மலையாளத்தில் அதை இயக்கிய சசிசங்கர் தான் தமிழிலும் இயக்குகிறார். இசை யுவன்சங்கர் ராஜா. ஏ.வி.எம். நிறுவனத்துக்கு இது 166வது படமாம்.


Click it and Unblock the Notifications











