ஹீரோ .. ஹீரோ ..

By Staff

காக்க காக்க பட டீம் தனது அடுத்த படத்தை சத்தமில்லாமல் தொடங்கிவிட்டது

தமிழில் உணர்வுப் பூர்வமான படங்களை எடுக்க மகேந்திரன், பாலுமகேந்திரா, பாலா போன்ற இயக்குநர்கள்உள்ளார்கள். படங்கள் மூலம் ரசிகர்களுக்கு ஏதேனும் மெசேஜ் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் படம்எடுக்க பாரதிராஜா, சேரன், தங்கர்பச்சான் ஆகியோர் இருக்கிறார்கள்.

அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து படத்தை எடுக்க பாலசந்தர் இருக்கிறார். சர்வதேச தரத்துக்கு உலக திரைப்படவிழாக்களில் திரையிடும் அளவுக்கு தமிழ் படங்களை எடுக்க மணிரத்னம், கமல் ஆகியோர் உண்டு.

ஆங்கிலப் படங்களுக்கு இணையாக கமெர்ஷியல் படம் எடுக்க தமிழில் ஆள் இல்லாமல் இருந்தது. ஸ்பீட்(ஆங்கிலம்) போல் விறுவிறுப்பான பேண்டஸி படம் தமிழில் வராதா என்ற ஏக்கம் பலருக்கு இருந்தது. அந்தக்குறையைத் தீர்க்க வந்தவர்தான் இயக்குநர் கெளதம்.

அவர் இயக்கிய காக்க காக்க படம், எந்தவொரு ஆங்கில கமெர்ஷியல் படத்துக்கும் சளைத்ததல்ல. ஆளவந்தான்தோல்வியால் துவண்டிருந்த கலைப்புலி தாணுவை மீண்டும் தலைநிமிர வைத்த படம். படத்தின் ஸ்கிரிப்டுக்குகிடைத்த பாராட்டால் உற்சாகமடைந்த தாணு, கார்டிங் ஆன் (Guarding on) என்ற பெயரில் படத்தை ஆங்கிலத்தில்தயாரிக்கும் வேலையில் மும்முரமாக உள்ளார். கெளதம்தான் இயக்குகிறார்.

கெளதமின் மின்னலே கூட வித்தியாசமான படம்தான். ஒரு காதல் கதையை சின்ன சின்ன திருப்பங்களுடன்விறுவிறுப்பாக கொடுத்திருந்தார். காக்க காக்க பட டீமோடு தனது அடுத்த புராஜெக்ட்டைத் தொடங்கி விட்டார்.

சென்னையில் ஒரு மழைக்காலம் என்று கவிதையாக படத்துக்கு பெயரிட்டுள்ளார். சூர்யாதான் படத்தின் ஹீரோ.இசை ஹாரீஸ் ஜெயராஜ். மணிரத்னம்- ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி எப்படியோ அப்படித்தான் கெளதம்- ஹாரீஸ்ஜெயராஜ் கூட்டணியும். இவர்கள் கூட்டணியில் வெளிவந்த மின்னலே, காக்க காக்க பட பாடல்கள் ரசிகர்களிடம்பலத்த வரவேற்பைப் பெற்றன.

சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தில் சூர்யாவை ஒரு பாடலுக்கு பாட வைத்துள்ளார்கள். எவ்வளவோமறுத்தவரை கெளதமும், ஹாரீஸ் ஜெயராஜும் குண்டுக்கட்டாகத் தூக்கி வந்து பாட வைத்திருக்கிறார்கள். பாடல்அற்புதமாக வந்திருக்கிறதாகக் கூறுகிறார்கள்.

இதற்கிடையே இந்தியில் பெரோஸ்கான் தயாரிப்பில் அவரது மகன் பர்தீன்கான் கதாநாயகனாகவும், தெலுங்கில்கலைப்புலி தாணு தயாரிப்பில் வெங்கடேஷ் கதாநாயகனாகவும் நடிக்க காக்க காக்க படத்தை ரீ மேக் செய்கிறார்கெளதம்.

இதில் வெங்கடேசுக்கு ஜோடி சேர்ந்து விட அபிராமி பகீரத முயற்சி எடுத்துள்ளார். கெளதம் ஓகே சொல்ல கடைசிநேரத்தில் வெங்கடேஷ் புகுந்து அபிராமியைத் தூக்கி விட்டார். சென்னையில் ஒரு மழைக்காலம் படத்திலாவதுவாய்ப்புக் கொடுங்கள் என்று அபிராமி கேட்க சூர்யா தலையிட்டு அவரை மாற்றி விட்டார்.

அபிராமிக்கு பயந்து இப்போது கெளதம் செல்போனை ஆன் செய்வதே கிடையாதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X