ஹீரோயினை விட மோசமா மாறிட்டாரே.. நயன்தாரா, த்ரிஷாவுக்கே கதிர் செம டஃப் கொடுப்பாரு போல!
சென்னை: பெரும்பாலும் டவல் மட்டும் கட்டிக் கொண்டு போட்டோக்களை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகைகள் அதிகளவில் புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். ஆனால், தற்போது அவர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் நடிகர் கதிர் வெளியிட்டுள்ள மிரர் செல்ஃபி புகைப்படம் ஏகப்பட்ட இளம் ரசிகைகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
மத யானைக்கூட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் கதிர் அந்த படத்தைத் தொடர்ந்து கிருமி, என்னோடு விளையாடு, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள், சிகை, சத்ரு, பிகில், ஜடா, சர்பத், அக்கா குருவி, யுகி, தலைக்கூத்தல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சுழல் வெப்சீரிஸ் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்த நிலையில், சுழல் 2விலும் சர்க்கரை கதாபாத்திரத்தில் கலக்கிய கதிர் அடுத்ததாக மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். கேரளாவில் இருந்து அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட ஏகப்பட்ட ஹார்ட்டின்கள் அவருக்கு குவிந்து வருகின்றன.
செம டேலன்ட்: முதல் படத்தில் இருந்து தமிழ் சினிமாவில் 12 வருடங்களை கடந்தும் அப்படியே அதே போலவே இருந்து வரும் கதிர் மிகவும் திறமையான நடிகர் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். சுழல் வெப்சீரிஸில் தனது ஒட்டுமொத்த நடிப்பையும் தான் எந்தளவுக்கு ஒரு ஹீரோ மெட்டீரியல் என்பதையும் அழகாக எடுத்துக் காட்டியிருப்பார். ஆனால், கோலிவுட்டில் அவருக்கு சரியான படங்கள் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்த பின்னர், சினிமாவில் உச்சம் தொடுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு திரைப்படங்களில் அவர் பெரிதாக ஷைன் ஆகவில்லை என்பது வருத்தம் தான்.
வெறும் டவலுடன் மிரர் செல்ஃபி: கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகள் படங்களில் டவலுடன் நடிக்கும் காட்சிகளை பார்த்திருப்போம். வில்லு படத்தில் நயன்தாரா, குருவி படத்தில் த்ரிஷா என டாப் ஹீரோயின்களே வெறும் டவலுடன் நடித்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளனர். கேரளாவிற்கு ஷூட்டிங் சென்ற நடிகர் கதிர் குளித்து முடித்து விட்டு வெறும் டவல் கட்டிக் கொண்டு மிரர் செல்ஃபி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஏகப்பட்ட இளம் பெண்களின் தூக்கத்தை கெடுக்க முடிவு செய்து விட்டார் என கமெண்டுகள் குவிந்து வருகின்றன.
மலையாள படம்: எம்சி ஜோசப் இயக்கத்தில் ஷைன் டாம் சாக்கோ உடன் இணைந்து கதிர் 'மீசை' எனும் மலையாளப் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில், அதன் டிரைலர் வெளியாகி மலையாள ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மலையாள நடிகர்கள் தமிழ் சினிமாவில் நடித்து வரும் நிலையில், கதிர் மலையாள படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அந்த படத்துக்காக கேரளாவுக்கு சென்றுள்ள கதிர், கேரளா டைரீஸ் என்கிற ஹாஷ்டேக்குடன் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
கெளரி கிஷன் கமெண்ட்: 96 படத்தின் மூலம் அறிமுகமான கெளரி கிஷன் கதிருடன் இணைந்து சுழல் 2 வெப்சீரிஸில் நடித்திருந்தார். இந்நிலையில், வெறும் டவல் அணிந்து கதிர் போட்ட புகைப்படத்தை பார்த்து கண் வைத்த கெளரி கிஷன் அவர் கேரளா என கமெண்ட் போட்டுள்ளார். சுழல் வெப்சீரிஸ் சீசன் 1ல் போலீஸாக நடித்த ஸ்ரேயா ரெட்டி, செம ஃபிட்டாக மாறிட்ட சக்கரை என கமெண்ட் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications