வீராசாமி படத்துல நான் வேட்டி கட்டிதானே நடிச்சேன்... நீங்களும் நடிங்களேன்.. டி.ஆர். பேட்டி!

By Mayura Akilan

தமிழ்நாட்டு நடிகர்கள் பாரம்பரியத்தை காக்கும் வகையில் திரைப்படங்களில் வேட்டி அணிந்து நடிக்கவேண்டும் என்று நடிகரும் லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்தர் கூறியுள்ளார் வருகிற சட்டமன்ற மற்றும் லோச்சபா தேர்தல்களில் தமிழகம் முழுவதும் லட்சிய தி.மு.க. வேட்பாளர்களை நிறுத்தும் என்றும் அவர் கூறினார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த டி.ராஜேந்தர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது அவர், கூறியதை மேற்கொண்டு படியுங்களேன்.

T.Rajendar urges Tamil actors to wear Dhoti and act in Film

மீனாட்சி தரிசனம்

மதுரையை ஆளும் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்துவிட்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். பின்னர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மாரியம்மன் கோவிலில் நடைபெற உள்ள காமராஜர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்கிறேன்.

வேட்டிக்கு தடையா?

சென்னை, சேப்பாக்கத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மன்ற கூட்ட அரங்கில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பஙகேற்க வேட்டி அணிந்து வந்த நீதியரசர் மற்றும் வக்கீல்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

முதல்வருக்கு நன்றி

இந்த பிரச்சினையில் தமிழர்களின் பாரம்பரியத்தினை காக்கும் வகையில் உரிய சட்ட முன்வடிவு ஏற்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

வேட்டி கட்டி நடித்தேன்

நான் வீராச்சாமி திரைப்படத்தில் வேட்டி அணிந்துதான் நடித்தேன். மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் போன்றவர்கள் வேட்டி அணிந்துதான் நடிக்கிறார்கள். திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். அங்கு விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலையும் அதிகம். இதனால் ஏழை மக்கள் திரையரங்குகளுக்கு செல்வதில்லை.

திமுக தானாகவே அழிந்துவிடும்

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்ததால்தான் இன்று தி.மு.க. இருக்கும் இடமே தெரியாமல் போனது. தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது என்று கூறி வருகின்றனர். ஆனால் தி.மு.க. தானாகவே அழிந்துவிடும்.

தேர்தலில் போட்டி

எங்கள் லட்சிய தி.மு.க. எப்போதும் ஏழை மக்களுக்கு பக்கபலமாக இருக்கும். வருகிற சட்டமன்ற தேர்தலிலும், லோக்சபா தேர்தலிலும் தமிழகம் முழுவதும் லட்சிய தி.மு.க. வேட்பாளர்களை நிறுத்தும். மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் கவுன்சிலர் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.

விலைவாசி உயர்வு

தற்போது விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்பட அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கச்சத்தீவு பிரச்சினை

இலங்கைக்கு காங்கிரஸ் ஆட்சியில்தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. இதனால் அந்த பகுதிக்கு செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் செல்கின்றனர். தமிழக மீனவர்கள் எல்லை மீறிச் செல்வதால்தான் இதுபோல நடக்கிறது என்கிறது பாஜக அரசு.

ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்

ஆட்சிக்கு வந்த உடனேயே பல்வேறு காரணங்களைக்கூறி ரயில் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதற்கு எங்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பினை ரூ.2 லட்சத்தில் இருந்து இரண்டரை லட்சமாக உயர்த்தி இருப்பது மிகவும் குறைவுதான். அதனை ரூ.3 லட்சத்தில் முதல் ரூ.5 லட்சம் வரை உயர்த்தி இருக்க வேண்டும் என்றார் டி.ராஜேந்தர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X