5 நிமிடத்திற்கு 5 கோடி.. டீலா நோ டீலா.. கறார் காட்டும் தமன்னா.. புலம்பும் தயாரிப்பாளர்கள்!

சென்னை: பாலிவுட்டில் செட்டிலாகி இருக்கும் நடிகை தமன்னா, அஜய் தேவ்கன், ரித்தேஷ் தேஷ்முக் நடித்துள்ள 'ரெய்டு 2' படத்தில் 'நஷா' என்ற பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி உள்ளார். அந்த பாடலை தமன்னாவின் தீவிர ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அந்த பாடலுக்கு தமன்னா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

'கேடி' என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தமன்னா. அந்த படத்தை தொடர்ந்து, வியாபாரி, கல்லூரி போன்ற படங்களில் நடித்தார். அந்த படங்கள் ஓரளவிற்கு தியேட்டரில் ஓடியதைத் தொடர்ந்து, தனுஷுக்கு ஜோடியாக படிக்காதவன் படத்தில் நடித்தார். அதன் பின் அயன், கண்டேன் காதலை, பையா, சிறுத்தை, வீரம், பாகுபலி என பெரிய நடிகர்களில் நடித்தில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் பாலிவுட் பக்கம் சென்ற தமன்னா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2ல் படு கவர்ச்சியாக படுக்கை அறை காட்சியில் வரம்பு மீறி நடித்திருந்தார்.

tamannaah bhatia raid 2 dance 2

ஐட்டம் பாடலுக்கு: தமன்னாவிற்கு பட வாய்ப்புகள் இல்லாத நேரத்தில் KGF முதல் பாகத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருந்தார். அதன் பின் ரஜினிகாந்த், நடித்த ஜெயிலர் படத்தில் 'காவாலா' பாடலுக்கு நடனமாடினார். அந்த பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று தமன்னாவை உச்சாணி கொம்பில் ஏற்றுவிட்டது. அந்த படத்தை தொடர்ந்து அரண்மனை 4 படத்தில் இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று வசூலை அள்ளியது. காவாலா பாடலுக்கு பின், பீக்குக் வந்திருக்கும், தமன்னா Odela 2, Raid 2, Ranger ஆகிய படத்தில் நடித்து வருகிறார்.

tamannaah bhatia raid 2 dance 2

பல கோடியில் சம்பளம்: இந்நிலையில், தமன்னா இந்தியில் ராஜ் குமார் குப்தா இயக்கத்தில் அஜய் தேவ் கன், வாணி கபூர்,ரித்தேஷ் தேஷ்முக் நடித்துள்ள ரெய்டு 2 திரைப்படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நாடனமாடி உள்ளார். இப்படம் தியேட்டரில் 1ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில், 'நஷா' என்ற பாடல் வெளியாகி இணையத்தில் ஹிட்டடித்து வருகிறது. படத்தில் 3 நிமிட வரும் இந்த பாடலுக்கு நடனமாட நடிகை தமன்னா ரூ. 5 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. தமன்னா காவாலா பாடலுக்கு நடனமாட ரூ.3 கோடி சம்பளம் பெற்றார்.

tamannaah bhatia raid 2 dance 2

விஜய் வர்மாவுடன் காதல்: நடிகை தமன்னா லஸ்ட் ஸ்டோரீஸ் 2ல் விஜய் வர்மாவுடன் சேர்ந்து நடித்த போது, காதல் வயப்பட்டதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார். எத்தனையோ படத்தில் நடிகர்களுடன் நடித்து இருக்கிறேன். ஆனால், அவருடன் நடித்த போது தான் இவர் எனக்கானவர் என்பதை நான் உணர்ந்தேன் என்று கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து இவர்களின் திருமணத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தமன்னா, விஜய் வர்மா இடையில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. அதற்கு காரணம் தமன்னா, தனது இன்ஸ்டாகிராமில் காதலில் தோற்றுவிட்டது போல ஒரு பதிவினை போட்டுவிட்டு, அது சர்ச்சையான நிலையில், அதை டெலிட் செய்துவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X