கல்வி நிதி உதவி வேண்டுமா? - உதவ சூர்யா தயார்!

பல ஆண்டுகளாக ப்ளஸ் டூவில் முதல் மதிப்பெண்கள் பெறும் மாணவ மாணவிகளுக்கு நடிகர் சிவக்குமார் நிதி உதவி செய்து வருகிறார்.
சூர்யா, நடிக்கத் துவங்கிய பிறகு அகரம் பவுண்டேசன் என்ற அமைப்பை உருவாக்கி, சிவக்குமார் செய்து வந்த கல்வி உதவியை விரிவாக்கினார். இதில் சூர்யாவின் சகோதரர் நடிகர் கார்த்தியும் இணைந்துள்ளார்.
அகரம் பவுண்டேசன் மூலம் நிதி உதவி பெற்று ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
இன்று ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், மேற்படிப்புக்கு பண உதவி வேண்டும் மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ள சூர்யா, தேவைப்படும் மாணவர்கள் தன்னை அணுகுமாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நிதியுதவிக்காக அகரம் பவுண்டேஷனை அணுக வேண்டிய தொலைபேசி எண்: 98410-91000
More from Filmibeat
agaram foundation அகரம் பவுண்டேஷன் அறிவிப்பு கல்வி உதவி சிவக்குமார் சூர்யா நிதி ப்ளஸ் டூ educational aid sivakumar surya


Click it and Unblock the Notifications











