twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எல்லாப் பக்கமும் 'கிக்'

    By Sudha
    |

    தில்லாலங்கடியில் தனது வித்தியாசமான கேரக்டருக்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பால் குஷியாகியுள்ளார் ஷாம்.

    தெலுங்கில் வெளியான கிக் படம்தான் தமிழில் தில்லாலங்கடியாக உருவாகி இருக்கிறது. தெலுங்கில் நடித்த அதே கரடு முரடான போலீஸ் கதாபாத்திரத்தில் தமிழிலும் நடித்துள்ளார் ஷாம்.

    இந்த கேரக்டருக்கு ஹீரோவுக்கு நிகரான வரவேற்பு கிடைத்திருப்பதால் ஷாம் குஷியாகியுள்ளார். இந்த மாதிரியான பாத்திரத்தில் நடிக்க சற்று சிரமப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

    சாக்லேட் பாய் இமேஜ் இன்னும் என்னை விட்டு முழுமையாகப் போகவில்லை. மீசை இல்லாத ஷாமைப் பார்த்த ரசிகர்களுக்கு அடர்த்தியான மீசையுடன் வந்த என்னை பிடித்துப் போய் விட்டது. எனது உடலிலும், முகத்திலும் மிடுக்கையும், முரட்டுத்தனத்தையும் ஏற்று சற்று சிரமப்பட்டேன் என்கிறார்.

    தற்போது கிக் படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்யவுள்ளனர். அதிலும் ஷாம் அதே வேடத்தில் நடிக்கப் போகிறாராம். அதேபோல இந்தியிலும் இதை ரீமேக் செய்யும் திட்டம் உள்ளதாம். அதிலும் ஷாமேதான் நடிக்கவுள்ளாராம்.

    இந்தியிலும் வென்று விட்டால் அதுதான் பாஸ் உண்மையான கிக் என்கிறார் கூடுதல் சந்தோஷத்துடன் ஷாம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X