நடிகை பாத்ரூம் போனதை மறைந்திருந்து பார்த்த நடிகர்?.. ச்சை இப்படியுமா ஷூட்டிங்கில் நடந்திருக்கு

சென்னை: சினிமாவில் நடிகைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல்தான் இப்போதும் நிலவிவருகிறது. அதனை தடுக்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்தாலும் அந்த அவல நிலை தீர்ந்தபாடில்லை. இந்த சூழலில் நடிகை பாத்ரூம் போனதை பார்க்க முயன்ற நடிகர் குறித்து செய்யாறு பாலு சொன்ன விஷயம் ஷாக்கை ஏற்படுத்தியிருக்கிறது.

சினிமா ஆணாதிக்க நிலையில் இருப்பது என்ற பேச்சு எப்போதும் உண்டு. அதற்கேற்றபடிதான் சினிமாக்களும் வந்துகொண்டிருந்தன. அதில் நடிக்கும் நடிகைகளின் நிலையும் இருந்தன. ஆனால் கடந்த சில காலமாகவே சினிமாவில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் வந்துகொண்டிருக்கின்றன. முன்னணி நடிகைகள் முதல் இளம் நடிகைகள் வரை அந்த மாதிரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்கள்.

Tamil Cinema actor watched the actress go to the bathroom from behind the tree in Shooting Spot

பெண்களுக்கு பாதுகாப்பின்மை: அதேசமயம் பெண்களுக்கு சினிமாவில் இருக்கும் பாதுகாப்பின்மை இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதிலும் அட்ஜெஸ்ட்மெண்ட் கலாசாரம் இன்னமும் ஒழிந்தபாடில்லை. சினிமா குடும்பத்திலிருந்து வந்த வரலட்சுமியிடம்கூட அட்ஜெஸ்ட்மெண்ட் அப்ரோச் சென்றிருக்கிறது என்றால் எவ்வளவு துணிச்சலாக அந்த விஷயம் இன்னமும் நடந்துகொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம்.

நடிகைகளின் ஓபன் டாக்: அந்த அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து நடிகைகள் வெளியில் பேசுவதை தவிர்த்து வந்தனர். ஆனால் சமீபமாக பல நடிகைகள் ஓபனாகவே பேசிவருகின்றனர். அது ஆரோக்கியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இப்படி நடிகைகளுக்கு இந்த ஒரு பிரச்னை மட்டும் இல்லை ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் அசௌகரியமான சூழலும் தலையாய பிரச்னையாகவே இருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

அங்கு அட்ஜெஸ்ட்மெண்ட்: அதாவது வளர்ந்து வரும் நடிகையாக இருந்தால் அவருக்கு அடிப்படை வசதிகளைக்கூட செய்து கொடுப்பதில்லை என்பதுதான் பெரும்பாலானோரின் குற்றச்சாட்டு. சமீபத்தில் பேட்டி அளித்திருந்த நடிகை அம்மு அபிராமிகூட கண்ட இடத்தில் பாத்ரூம் சென்று இன்ஃபெக்ட் ஆகிவிட்டதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சீரியல் நடிகை ஒருவரும் இப்படி பேசியிருந்தது நினைவுகூரத்தக்கது.

கேரவன் கலாசாரம்: இதற்கிடையே சினிமாவில் கேரவன் கலாசாரமும் பெருகியிருக்கிறது. உச்ச நடிகர்கள், நடிகைகளுக்கு அந்த கேரவன் வசதி செய்து கொடுக்கப்படுகிறது. இதெல்லாம் தேவையில்லாதது என்று ஒருதரப்பினர் கூறுகிறார்கள். ஆனால் நடிகைகளுக்கு இது ரொம்பவே அவசியமான ஒன்றாகத்தான் பார்க்க வேண்டும். இந்நிலையில் கேரவன் கலாசாரம் இல்லாதபோது ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைக்கு நிகழ்ந்த கொடுமையை பற்றி செய்யாறு பாலு பேசியிருக்கிறார்.

செய்யாறு பாலு பேட்டி: அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "கேரவன் கலாசாரம் எல்லா மொழி சினிமாக்களிலும் பெருகிவிட்டது. 7 ஸ்டார் கேரவன்தான் இருப்பதிலேயே அதிக வசதி கொண்ட கேரவன். பிரபாஸ் போன்ற உச்ச நடிகர்களுக்கு எல்லாம் அந்த வகை கேரவன்கள்தான் கொடுக்கப்படுகின்றன. கமல் ஹாசன் எல்லாம் சொந்தமாகவே கேரவனை வாங்கிவிட்டார்.

நடிகைக்கு நேர்ந்த அவலம்: நடிகைகளுக்கு கேரவன் ரொம்பவே உபயோகம் உள்ளதாக இருக்கிறது. 90களில் பிரபலமான நடிகையாக இருந்தவர் அவர். பெயர் சொல்ல விரும்பவில்லை. அவர் பாரதிராஜாவின் அறிமுகம்தான். அந்த சமயத்தில் கேரவன் கலாசாரம் எல்லாம் இல்லை. ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது அவருக்கு இயற்கை உபாதை வந்திருக்கிறது. அதை கழிப்பதற்காக ஒரு இடத்துக்கு சென்றிருக்கிறார்.

உஷாரான நடிகை: ஆனால் அந்த இயற்கை உபாதையை கழிப்பதற்கு முன்னதாகவே தன்னை யாரோ மறைந்திருந்து பார்க்கிறார்கள் என்று தோன்றியிருக்கிறது. இதனால் உஷாரான நடிகை வேண்டாம் என்று முடிவெடுத்து அந்த இடத்திலிருந்து நடக்க ஆரம்பித்துவிட்டார். சிறிது தூரம் வந்து திரும்பி பார்த்தால் ஒரு மரத்தின் மறைவிலிருந்து அந்தப் படத்தின் முக்கியமான நடிகர் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார். இது அந்த நடிகைக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிறகு அது பெரிய விஷயம் ஆகிவிட்டது"" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X