»   »  பராசக்தி வந்து 60 வருஷமாச்சி.. ஆனாலும் சிவாஜியை இந்த விஷயத்துல அடிச்சுக்க முடியலையே!

பராசக்தி வந்து 60 வருஷமாச்சி.. ஆனாலும் சிவாஜியை இந்த விஷயத்துல அடிச்சுக்க முடியலையே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தான் அறிமுகமாகும் முதல் படத்திலேயே உச்சம் தொடும் அதிர்ஷ்டம் சினிமாவில் ஒரு சிலருக்குத் தான் கிடைக்கும்.

அந்த வகையில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான பராசக்தி திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை தமிழ் சினிமாவில் பெற்றுத் தந்தது.

அன்றைய பராசக்தி தொடங்கி இன்றைய பருத்திவீரன் வரை தமிழ் சினிமாவின் சிறந்த அறிமுக நடிகர்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

5.உன்னாலே உன்னாலே - வினய்

5.உன்னாலே உன்னாலே - வினய்

2007 ம் ஆண்டு வினய், சதா, தனிஷா முகர்ஜி நடிப்பில் வெளியான உன்னாலே உன்னாலே திரைப்படம் வினய்க்கு தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த அறிமுகத்தைப் பெற்றுத் தந்தது. காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸிலும் ஒரு மிகப்பெரிய வசூலை எட்டியது. உன்னாலே உன்னாலே படமும், பாடல்களும் இன்றளவும் இளசுகளின் மனங்கவர்ந்த ஒரு விஷயமாகவே உள்ளது. காதலர்களுக்கு இடையே நடக்கும் மோதல்தான் கதை என்றாலும் இயக்குநர் ஜீவா அதனை திரையில் காட்டிய விதம் பலரையும் கவர தமிழ்நாட்டில் 100 நாட்களை வெற்றிகரமாக எட்டியது உன்னாலே உன்னாலே.

4.பருத்திவீரன் - கார்த்தி

4.பருத்திவீரன் - கார்த்தி

அமீர் இயக்கத்தில் கார்த்தி, பிரியாமணி, பொன்வண்ணன், சரவணன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான பருத்திவீரன் கார்த்திக்கு ஒரு மாபெரும் ஹிட் அறிமுகத்தைப் பெற்றுத் தந்தது. மதுரை மண்ணுடன் காமெடி+ காதலை மிக்ஸ் செய்து அசத்தியிருந்தார் அமீர். இந்தப் படத்திற்காக அழுக்குச்சட்டை, லுங்கி அணிந்து அந்தப் பாத்திரமாகவே மாறியிருந்தார் கார்த்தி. மேலும் இந்தப் படத்திற்குப் பின்னர் மதுரை மண்ணை களமாக வைத்து படத்தை எடுக்கும் மனோபாவமும் தமிழ் சினிமாவில் அதிகரித்தது. 2 தேசிய விருதுகளை வென்ற இந்தப் படம் 2007 ம் ஆண்டின் அதிகம் வசூல் செய்த வெற்றிப் படங்களில் ஒன்றாக மாறியது. அறிமுகமான முதல் படத்தில் கொடுத்த ஹிட்டை கார்த்தியால் இன்றுவரை கொடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3.காதலர் தினம் - குணால்

3.காதலர் தினம் - குணால்

கதிர் இயக்கத்தில் குணால் - சோனாலி பிந்த்ரே நடிப்பில் 1999 ம் ஆண்டு காதலர் தினம் படம் வெளியானது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான பாடல்கள் அன்றைய கால கட்டத்தில் இளைஞர்களின் தேசிய கீதமாகவே மாறிப் போனது. வழக்கமான காதல் கதை என்றாலும் குணால் - சோனாலி பிந்த்ரே என்ற இளஞ்ஜோடிகளின் நடிப்பும், பாடல்களும் சேர்ந்ததில் படம் வசூல்ரீதியாக வெற்றி பெற்று குணாலுக்கு ஒரு சிறப்பான வரவேற்பை தமிழ் சினிமாவில் பெற்றுக் கொடுத்தது.

2.அலைபாயுதே - மாதவன்

2.அலைபாயுதே - மாதவன்

இந்தப் படம் வந்த புதிதில் வீட்டிற்குத் தெரியாமல் நிறைய காதலர்கள் திருமணம் செய்து கொண்டது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய ஒரு விஷயமாக மாறியது. மணிரத்னம் இயக்கத்தில் திருமண வாழ்க்கை+ காதல் இரண்டையும் கலந்து கட்டி வெளியான அலைபாயுதே மாதவனுக்கு ஒரு மிகப்பெரிய அறிமுகத்தை தமிழ் சினிமாவில் கொடுத்தது. மாதவன், ஷாலினியின் இயல்பான நடிப்பும், ஏ.ஆர்.ரகுமானின் இசையில் வெளியான பாடல்களும் அலைபாயுதே படத்தை மிகப்பெரிய ஹிட் படமாக மாற்றின. தமிழ் சினிமாவில் சிவாஜிக்குப் பின்னர் ஒரு சிறப்பான அறிமுகம் மாதவனுக்குக் கிடைத்தது என்று சொன்னால் அது மிகையல்ல.

1.பராசக்தி - சிவாஜி கணேசன்

1.பராசக்தி - சிவாஜி கணேசன்

பராசக்தி வெளியாகி 63 வருடங்கள் கடந்து விட்டன. ஆனாலும் இந்தப் படத்தையும் சிவாஜி கணேசனின் நடிப்பையும் இதுவரை யாரும் மிஞ்ச முடியவில்லை என்பதுதான் இப்படத்தின் ஹைலைட். கிருஷ்ணன்,பஞ்சு இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு கலைஞர் கருணாநிதியின் வசனங்கள் தூணாக அமைந்தன. சிவாஜி அறிமுகமான முதல் படமே அவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட்டாக அமைந்து விட்டது. பராசக்தி ஏற்படுத்திய தாக்கத்தை இன்றளவும் வேறு எந்தப் படங்களும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் நிதர்சனம்.

ஒரே நாளில் ஹாலிவுட் நடிகர் ஸ்பென்ஸர் டிரசியுடன் ஒப்பிடப்படும் அளவுக்கு சிவாஜி கணேசனின் புகழ் உயர்ந்தது. தமிழ்நாட்டில் 175 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய பராசக்தி வசூலிலும் நல்ல லாபத்தை ஈட்டியது. குறிப்பாக அந்த கோர்ட் காட்சிகளும், வசனங்களும் மக்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. தமிழ் சினிமாவின் கண்டிப்பாகப் பார்க்கக் கூடிய படங்களில் பராசக்திக்கு ஒரு தனியான இடமுண்டு.

மொத்தத்தில் முதல் படத்திலேயே சிவாஜி கணேசனுக்கு கிடைத்த அறிமுகம் இன்றளவும் வேறு எந்த நடிகருக்கும் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

English summary
Tamil Cinema Best Debut Actors List 1. Parasakthi - Sivaji Ganesan 2. Alaipayuthey -Madhavan 3. Kadhalar Dhinam - Kunal 4.Paruthiveeran - Karthi 5.Unnale Unnale - Vinay.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil