Dhanush: அஜித்தை சந்தித்த தனுஷ்?.. கதை சொன்னாரா?.. அஜித் ரியாக்ஷன் தான் என்ன?.. AK 65 லோடிங்கா?
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் வரும் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை அடுத்து அஜித் யார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. காரணம், அஜித் வரும் அக்டோபர் மாதம் வரை கார் ரேஸில் கவனம் செலுத்த உள்ளார். எனவே, இவர் அடுத்து யார் படத்தில் நடிக்கவுள்ளார் என்ற கேள்வி பலருக்கும் இருந்து வந்தது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த இரண்டு படங்கள் குறித்த தகவல்கள் கோலிவுட் வட்டாரத்தில் வேகமாக பரவி வருகிறது.
அஜித் நடிப்பில் இந்த ஆண்டில், அதுவும் முதல் நான்கு மாதங்களுக்கு உள்ளாகவே இரண்டு படங்கள் வெளியாகிறது. இதில் ஏற்கனவே பிப்ரவரி 6ஆம் தேதி விடாமுயற்சி படம் வெளியான நிலையில், வரும் 10ஆம் தேதி குட் பேட் அக்லி படம் வெளியாகவுள்ளது. ஜனவரியில் இருந்து வரும் அக்டோபர் வரை அஜித் தனது கார் ரேஸ் பந்தயத்தில் கவனம் செலுத்த உள்ளதால், படங்களில் நடிக்க வாய்ப்பு இல்லை.

அதே நேரத்தில் அக்டோபர் மாதத்தில் கார் ரேஸ் முடிந்ததும், சில வாரங்கள் மட்டும் ஓய்வெடுத்துவிட்டு அஜித் மீண்டு படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது. இதற்காக அஜித் இப்போது இருந்தே கதைகள் கேட்டு வருகிறார் என்ற தகவலும் உலா வருகிறது. குட் பேட் அக்லி படம் அஜித்தின் 63வது படம். இந்த படத்தை அடுத்து, அஜித், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் மீண்டும் படம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் அஜித்தின் 64வது படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குவார்.
தனுஷ்: இப்படியான நிலையில், நடிகர் தனுஷ், அஜித்தை சந்தித்து கதை சொல்ல நேரம் கேட்டதாக சில மாதங்களுக்கு முன்னர் பேச்சுகள் உலா வந்த வண்ணம் இருந்தது. அப்படி இருக்கும்போது, அஜித் சில தினங்களுக்கு முன்னர் சென்னைக்கு வந்துள்ளார். சென்னைக்கு வந்த அஜித் சென்னையில் மொத்தம் இரண்டு நாட்கள் இருந்துள்ளார். இந்த இரண்டு நாட்களில் ஒருநாள் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டுள்ளார்.

அஜித் ரியாக்ஷன்: மற்றொரு நாளில் தனுஷ், அஜித்தை சந்தித்ததாக கூறப்படுகிறது. மேலும் தனுஷ் அஜித்திற்கு தனது கதையைக் கூறியுள்ளார். கதை அஜித்திற்கு பிடித்துப் போனதாக கூறப்படுகிறது. எனவே அஜித்தின் 65 வது படத்தை தனுஷ் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. கதை அஜித்துக்கு மிகவும் பிடித்துப் போனதால், தனுஷ் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாராம். மேலும், தனது 64 வது படத்தை முடித்துவிட்டு வருவதாக உறுதியளித்துள்ளாராம். எனவே அதற்கு படத்துக்கு மொத்த திரைக்கதையையும் தயார் செய்து வைக்க தனுஷ் முடிவெடுத்துள்ளார்.

டபுள் ட்ரீட்: தனுஷ் இதுவரை நான்கு படங்களை இயக்கியுள்ளார். அதில் மூன்று படங்களில் அவரே நடிக்கவும் செய்துள்ளார். இப்படியான நிலையில் மாஸ் நடிகரை வைத்து தனுஷ் இயக்கவுள்ளதால், படத்தின் அதிகாரப்பூர்வ அறிவுப்புக்காக கோலிவுட் காத்துக் கொண்டுள்ளது. இன்னும் தயாரிப்பாளர் உறுதியாகவில்லை எனக் கூறப்படுவதால், வரும் மே 1ஆம் தேதி அஜித்தின் 64வது மற்றும் 65வது படத்தின் அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் ஒரு பேச்சு திரைத்துறையில் ஓடிக் கொண்டு உள்ளது.


Click it and Unblock the Notifications











