ஹீரோவுக்கு வந்த சோதனைய பாருங்க... வில்லனாக வாய்ப்புத் தேடுறாராம்
சென்னை : 'மிருகம்' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான நடிகர் ஆதி, 'அரவாண்' படத்திற்கு பிறகு தமிழில் சரியான படங்கள் இல்லாமல் தெலுங்கிற்கு சென்றார். பிறகு 'கோச்சடையான்' படத்தில் நடிக்கும் வாய்ப்புப் பெற்றார்.
தெலுங்கில் சில படங்களில் வில்லனாக நடித்தவர் மீண்டும், 'யாகவராயினும் நாகாக்க' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அந்தப்படம் கைகொடுக்காத நிலையில், 'மரகத நாணயம்' படத்தில் நடித்தார். அப்படம் ஹிட்டடித்தபோதும் பின்னர் தமிழில் ஆதிக்கு படங்கள் இல்லை.

அதனால், மீண்டும் தற்போது தெலுங்கிற்கு சென்றுள்ள அவர், வில்லன் மட்டுமின்றி வித்தியாசமான கேரக்டர்களிலும் சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதோடு, அடுத்தபடியாக தமிழிலும் நெகட்டிவ் வேடங்கள் கிடைத்தால் நடிக்கத் தயாராகிக்கொண்டிருக்கும் ஆதி, சில டைரக்டர்களிடம் தான் தெலுங்கில் வில்லனாக நடித்துள்ள படங்களை முன்வைத்து வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











