»   »  இவங்கதாங்க கோலிவுட்டோட சிங்கிள் ஸ்டேட்டஸ் ஹீரோக்கள்!

இவங்கதாங்க கோலிவுட்டோட சிங்கிள் ஸ்டேட்டஸ் ஹீரோக்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹிந்தியில் மற்ற ஹீரோக்கள் எல்லாம் திருமணம் செய்து குழந்தை, குட்டிகளோடு செட்டில் ஆகிவிட, சல்மான் கான் மட்டும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் பேச்சிலராகவே தொடர்கிறார். முப்பது வயது ஆன உடனேயே ஹீரோயின்களுக்கு திருமண ஆசை வந்துவிடுகிறது.

ஆனால் நாற்பதைத் தாண்டியும் கூட சில ஹீரோக்கள் பேச்சிலராகவே வலம் வருகிறார்கள். அப்படி பேச்சிலராகவே வலம் வரும் ஹீரோக்கள் தமிழிலும் இருக்கிறார்கள். அவர்களை கணக்கெடுத்தோம்(வேலை வெட்டி இல்லை பாஸ்!)

ஆர்யா

ஆர்யா

தமிழ் சினிமாவின் சல்மான் கான். கிசுகிசுக்களின் மன்னன். சமீபகாலமாக எந்த கிசுகிசுக்களும் வரவில்லை. கல்யாணத்துக்காக நல்ல பிள்ளையாக மாறியிருப்பார் என்று பார்த்தால் இல்லையாம். வீட்டில் திருமணத்துக்கு அவசரப்படுத்துகிறார்கள். நாற்பதைத் தொட்டும் கூட திருமணம் செய்துகொள்ளாமலேயே இருக்கிறார் ஆர்யா.

விஷால்

விஷால்

சங்க கட்டடத்தில் தான் தனது திருமணம் என்றார். வரலட்சுமியைத்தான் திருமணம் செய்துகொள்வார் என்று பெட் கட்டினார்கNd. கட்டடத்துக்கு இந்த வராம் பூஜை. ஆனால் வரலட்சுமியை ப்ரேக் அப் செய்துவிட்டார் என்று செய்தி அடிபடுகிறது. யாரா இருந்தா என்ன? சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கப்பா... என்று வீட்டில் வற்புறுத்துகிறார்கள். ஆனால் இன்னும் காலம் வரட்டும் என்று கல்யாண பேச்சை கட் செய்துவிடுகிறார் இந்த நாற்பது வயது பேச்சிலர்.

சித்தார்த்

சித்தார்த்

முதல் திருமணம் தோல்வியில் முடிந்து விவாகரத்து முடிந்துவிட்டது. பின்னர் ஒரு ஹீரோயினை விரும்பியதாக கிசுகிசு வந்தது. அந்த ஹீரோயினுக்கும் இன்னொரு ஹீரோவுடன் நிச்சயம் முடிந்துவிட்டது. இன்னமும் பேச்சிலராகவே தொடர்கிறார்.

ஜெய்

ஜெய்

அஞ்சலியுடன் ரிலேஷன்ஷிப், லின் இன் டுகெதராக வாழ்வதாக கிசுகிசு ஓடுகிறது. இல்லவே இல்லை என்று ஒரு பக்கம் சொல்லிவிட்டு இன்னொரு பக்கம் ஒரே வீட்டில் தோசை சுட்டு செல்ஃபி எடுத்து வெளியிடுகிறார். மேரேஜ் எப்போ என்றால் இன்னும் நேரம் வரலை என்கிறார்.

எஸ்ஜே சூர்யா

எஸ்ஜே சூர்யா

இதில் சீனியர் பேச்சிலர் இவர் தான்.திருமணம் செய்துகொள்ளவே இல்லை. ஒரு நடிகையை காதலித்தார். அவர் ஏமாற்றிய விரக்தி தான் காரணம் என்கிறார்கள். எனக்கு திருமணம் செட் ஆகாது என்று சிரிப்பை பதிலாக தருகிறார்.

சிம்பு

சிம்பு

தங்கைக்கு திருமணமாகி குழந்தை பிறந்துவிட்டது. வரிசையாக காதல் தோல்விகளைப் பார்த்தது தான் மிச்சம். டிஆர் போராடி பார்க்கிறார். சிம்புவுக்கு திருமணம் அமைய மறுக்கிறது.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

இந்த வரிசையில் லேட்டஸ்ட் வரவு கமல்ஹாசன். வாணி, சரிகாவைப் பிரிந்து கவுதமியுடன் லிவிங் டுகெதர் வாழ்ந்து அதுவும் இப்போது இல்லாததால் பேச்சிலராக ஆகி இருக்கிறார். அடுத்த ரிலேஷன்ஷிப் யார் என்று கோலிவுட் பரபரக்கிறது.

இவர்கள் தவிர அதர்வா, கவுதம் கார்த்திக் என்று இளவட்ட நடிகர்களும் சிங்கிளாகவே ஸ்ட்டேட்டஸை மெய்ண்டெய்ன் பண்ணுகிறார்கள்.

English summary
Tamil cinema's single status heroes Here is the list of heroes in Tamil cinema those are living as single.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil