பால் டப்பா மூஞ்சி.. பாத்தா எப்படி லவ் வரும்.. சினிமாவில் இப்படியும் சில நடிகர்களா?..

சென்னை: சினிமா பிரபலங்கள் கலந்துகொண்ட விழா மேடையில் நடிகர் கவுண்டமணி தனது பாணியிலேயே ஒரு விளக்கம் தருவார். சினிமாவில் ஜெயிக்கனும்னா அழகும், அதிர்ஷ்டமும் இருந்தால் மட்டும் போதாது திறமையை வளர்த்துகொள்ள வேண்டும். திறமை இல்லாட்டியும் நடிக்க வந்ததுக்கப்புறமாவது வளர்த்துக்கனும். அதிர்ஷ்டம் எப்போதுமே நம்ம பக்கம் இருக்காது என தெரிவித்திருப்பார். அதேமாதிரி தமிழ் சினிமாவில் சீசன் போல் வந்து சென்ற நடிகர்களை இந்த தொகுப்பில் காணலாம்.

தயாரிப்பாளர் பாலாஜி பிரபு: சினிமா பட தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சமீபகாலமாக அவர் அளிக்கும் பேட்டிகளில் தமிழ் பிரபலங்கள் குறித்து அலசி ஆராய்ந்து பேசி வருகிறார். விஜய் முதல் நயன்தாரா வரை பேசி விவாதத்தையும் ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில்
ஆடி வெள்ளின்னு ஒரு படம். அதுல யானையைக் காட்டுவாங்க. அந்த யானை நல்ல பேமஸ் ஆகிடுச்சு. பலபேரு அந்த யானையை வச்சி படம் எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. அதே மாதிரிதான் சினிமாவில் வெறும் அழகு இருந்தால் மட்டும் பத்தாது. திறமையும் இருக்கணும். அது இல்லன்னா அவ்ளோதான் என தெரிவித்தார்.

tamil cinema actors Appas thavakkalai

அப்பாஸ்: வெள்ளையா மொழுக் மொழுக்னு இருந்தா மட்டும் போதுமா? முகத்துல உணர்ச்சி வேண்டாமா? பால் டப்பா மாதிரி முகத்தை வைத்திருந்தால் போதுமா என தயாரிப்பாளர் பாலாஜி விமர்சித்துள்ளார். அப்பாஸ் காதல் தேசம் படத்தில் நடிச்சு நல்ல பெயர் வாங்குனாரு. அப்புறம் 23 தயாரிப்பாளர்கள் அப்பாஸ் அப்பாஸ் என அலைஞ்சாங்க, அட்வான்ஸூம் கொடுத்தாங்க, ஆனா 3 படத்துக்கு மேல எந்த படமும் ஓடல. மார்க்கெட்டும் போச்சு அப்புறம் விளம்பரத்தில் நடிச்சுட்டு இருக்காரு. சினிமா எப்போதுமே ஜெயிச்சவங்க பக்கம் மட்டும் தான் இருக்கும் என அவர் தெரிவித்தார்.

பவர் ஸ்டார்: சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் பவர் ஸ்டார் நடித்திருந்தார். பவன் கல்யாணுக்கு கொடுத்த பட்டத்தை கொண்டு வந்து பவர் ஸ்டார் சீனிவாசன்னு வைத்துக்கொண்டார். அவர் படத்தில் நடிக்க ஒரு நாளைக்கு 10 லட்சம் வாங்கினாரு. அவருக்குன்னு தனியா பாட்டு எல்லாம் கொடுக்க ஆரம்பிச்சாங்க. இப்ப எங்கே அந்த பவர் ஸ்டார்? காணாமல் போய்விட்டார். வீட்டில் ரெஸ்ட் எடுப்பார் என்று நினைக்கிறேன் என பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.

tamil cinema actors Appas thavakkalai

முந்தானை முடிச்சு தவக்களை: பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியான முந்தானை முடிச்சு தவக்களைக்கு அப்படிஒரு மவசுங்க. ஆனால், தவக்களை கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காகவே அவர் பெயர் தவக்களை என்றே மாறிவிட்டது. அப்ப அவருக்கு பெரிய மார்க்கெட்., இப்ப அவர் இல்லைன்னு நினைக்கிறேன் நல்ல நடிகர் என பாராட்டி பேசியிருந்தார் பாலாஜி.

வினித்: அப்பாஸை போன்று வினித்தும் காதல் தேசம் படத்தின் மூலம் பிரபலம் ஆனார். ஆனால், அவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சந்திரமுகி படத்தில் ஜோதிகாவுடன் சேர்ந்து நடித்து மீண்டும் என்ட்ரி கொடுத்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான காதல் என்பது பொதுவுடமை நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: அப்பாஸ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X