கோ கொரோனா கோ.. கொடிய வைரஸை விரட்ட.. அகில உலக சூப்பர்ஸ்டாரின் அசத்தலான வீடியோ!
சென்னை: கொரோனா வைரஸ் கிட்ட இருந்து தப்பித்துக் கொள்ள மக்களுக்கு இருக்கும் ஒரே வழி தனித்து இருத்தல் மட்டும் தான் என்று நடிகர் சிவா வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
Recommended Video
கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல்ஹாசன், ராகவா லாரன்ஸ், யோகி பாபு, வடிவேலு உள்ளிட்ட பலர் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழ்ப்படம், சென்னை - 600028, வணக்கம் சென்னை, தமிழ்ப்படம் 2 உள்ளிட்ட பல படங்களில் காமெடி நாயகனாக அசத்தி வரும் நடிகர் சிவா தற்போது, கொரோனா வைரஸ் விழிப்புணர்வு வீடியோவை தனது ஸ்டைலில் காமெடியாகவும் கருத்துடனும் பதிவிட்டுள்ளார்.
வந்த வேகத்தில் திரும்பிப் போ கொரோனா என்றும், கோ கொரோனா கோ என்றும் தூக்கத்தில் நடிகர் சிவா புலம்புவது போலவும், அவருடைய அம்மா, எழுந்து வீட்டை பெருக்கி, பாத்திரம் கழுவி வை என ஆர்டர் போடும் விதமாகவும் அந்த வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
உலகையே ஆட்டிப் படைத்து வரும் கோரமான இந்த வைரஸ் பிடியில் இருந்து தப்பிக்க, சோஷியல் டிஸ்டன்ஸை அனைவரும் பின்பற்ற வேண்டியது இன்றியமையாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











