அடுத்த சர்வே வந்துடுச்சி டோய்... ஆர்யாவுக்கு முதலிடம்... விஜய்க்கு 5-ம் இடம்!!

By Shankar

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கருத்துக் கணிப்பு கிளப்பிய பரபரப்பே இன்னும் தகித்துக் கொண்டிருக்கும் வேளையில், இன்னொரு முன்னணிப் நாளிதழ் இன்னொரு கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த நாளிதழின் பெயர் டைம்ஸ் ஆப் இந்தியா. கருத்துக் கணிப்புக்கு தலைப்பு: 2013-ல் எல்லோருக்கும் விருப்பமான நாயகன் யார்?

இந்த கணிப்பில் முதலிடம் பெற்றவர்... ஆர்யா. இவருக்குப் பிறகு இரண்டாம் இடத்தில் சூர்யா.

அப்புறம்தான் அஜீத், விஜய், தனுஷ் போன்றவர்கள் எல்லாம் என்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா.

ஆர்யா

ஆர்யா

இப்படியொரு கணிப்பில் ஆர்யா எப்படி முதலில் வந்தார்... அப்படி அவர் நடித்த படங்கள் என்னென்ன ஓடின?

சேட்டை, ராஜாராணி, ஆரம்பம், இரண்டாம் உலகம் ஆகிய படங்களில் நடித்தார். இவற்றில் சேட்டை, இரண்டாம் உலகம் படங்களின் முடிவு உலகறியும். ஆரம்பம் சுமாராகப் போனது. ஆனால் அதில் முதல் ஹீரோ அஜீத். ராஜாராணியின் வெற்றியையும் ஆர்யா ஒருவரே சொந்தம் கொண்டாட முடியாது. இருந்தாலும் எல்லா நாயகிகளுடனும் கிசுகிசுக்கப்படும் பிரம்மச்சாரி என்பதாலோ என்னமோ.. அதிக வாக்குகள் அடிப்படையில் ஆர்யாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது (பெண்கள் வாக்கு அதிகம் போல).

சூர்யா

சூர்யா

எல்லோரையும் கவர்ந்த இளம் நாயகர்களில் அடுத்த இடம் சூர்யாவுக்குக் கிடைத்துள்ளது. இவர் நடித்து கடந்த ஆண்டு வந்த ஒரே படம் சிங்கம் 2. ப்ளாக்பஸ்டர். அதிரடி, மென்மை, அழகிய காதல், சரித்திரம் என எந்தக் கதைக்கும் பொருந்தும் ஒரே நாயகனான சூர்யா, கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜீத்

அஜீத்

இந்த கருத்துக் கணிப்பில் கடந்த ஆண்டு நான்காவது இடத்திலிருந்த அஜீத், இந்த ஆண்டு மூன்றாவது இடம் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு வெளியான அவரது ஒரே படம் ஆரம்பம்தான். அதுவும் பெரிய வெற்றிப் படம் என்று சொல்ல முடியாது.

தனுஷ்

தனுஷ்

கடந்த ஆண்டு ஐந்தாம் இடத்திலிருந்த தனுஷ், இந்த ஆண்டு நான்காவது இடத்துக்கு வந்துள்ளார். அவரது தமிழ்ப் படங்கள் சரியாக ஓடாவிட்டாலும், முதல் இந்திப் படமான ராஞ்சஜனா உதவியுடன் இவ்வளவு ஓட்டுப் பெற்றுள்ளார்.

விஜய்

விஜய்

விஜய்க்கு இந்த வாக்கெடுப்பில் ஐந்தாம் இடம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு அவர் மூன்றாம் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்னொரு பத்திரிகையின் சமீபத்திய அடுத்த சூப்பர் ஸ்டார் கணக்கெடுப்பில் முதலிடம் பெற்றவர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு

சிம்பு

இந்த கணக்கெடுப்பில் சிம்புவுக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இவருக்கு 11வது இடம் கிடைத்தது. ஒரு படம் கூட வெளியாகாத இவருக்கு 6வது இடம் கிடைத்தது அதிசயம்தான்.

விக்ரம்

விக்ரம்

சிறந்த நடிகர் என்று புகழப்படும் விக்ரமுக்கு இந்த கணக்கெடுப்பில் 7வது இடம் கிடைத்துள்ளது. இவரது படம் எதுவும் கடந்த ஆண்டு வெளியாகவில்லை. இந்த கணிப்பில் கடந்த ஆண்டு இரண்டாவது இடத்திலிருந்த இவர் ஏழாம் இடத்துக்கு சரிந்துள்ளார்.

ஜீவா

ஜீவா

கடந்த ஆண்டு 12வது இடத்திலிருந்த ஜீவாவுக்கு இந்த ஆண்டு எட்டாவது இடம் கிடைத்துள்ளது.

விக்ரம் பிரபு

விக்ரம் பிரபு

இன்னும் முழுசாக நடிக்கவே தெரியவில்லை என்ற விமர்சனத்துக்குள்ளாகியிருக்கும் விக்ரம் பிரவுக்கு கடந்த ஆண்டு 18வது இடம். இந்த ஆண்டு 9வது இடம்.

சித்தார்த்

சித்தார்த்

எல்லோரது மனம் விரும்பும் நடிகர்கள் பட்டியலில் சித்தார்த்துக்கு பத்தாவது இடம் கிடைத்துள்ளது.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

இதில் கொடுமை என்னவென்றால் பலரும் விரும்பும் நாயகன் எனப்படும் விஜய் சேதுபதி பதினோறாவது இடம் கிடைத்திருப்பதுதான். இதைவிடக் கொடுமை, கடந்த ஆண்டு அவருக்கு இந்தப் பட்டியலில் இடமே இல்லை. இந்த இரு ஆண்டுகளில் விஜய் சேதுபதி எட்டுப் படங்கள் நடித்துள்ளார். இவற்றில் நான்கு சூப்பர் ஹிட்!!

இன்னும் ஜெயம் ரவி, கார்த்தி, சிவகார்த்திகேயனெல்லாம் கூட இந்தப் பட்டியலில் உள்ளனர். ஆனால் ரொம்ப தூரத்தில் உள்ளனர்!

என்றைக்கும் பிடித்தவர்கள்..

என்றைக்கும் பிடித்தவர்கள்..

இந்த கருத்துக் கணிப்பில் என்றைக்கும் பிடித்தமானவர்கள் என்ற ஒரு தேர்வை வைத்திருந்தனர். அதில் முதலிரு இடங்களைப் பிடித்தவர்கள்... சந்தேகமென்ன, நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன் கமல்ஹாசனும்தான்!!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X