தமிழிசை, சோபியா சம்பவம் உண்மையில் எங்கு நடந்தது?: சொல்கிறார் சித்தார்த் #Sophia
சென்னை: பாஜக மாநில தலைவர் தமிழிசையை பார்த்ததும் மாணவி சோபியா கோஷமிட்ட சம்பவம் உண்மையில் எங்கு நடந்தது என்று நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை விமானத்தில் பார்த்த மாணவி சோபியா பாஜக அரசுக்கு எதிராக கோஷமிட்டார் என்று கூறி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் இது குறித்து நடிகர் சித்தார்த் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஏர்கிராப்ட்
டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தன்னுடைய ட்வீட்டுகளில் 'airgraft' என்று பல முறை குறிப்பிட்டதை தவிர உண்மையான செய்திகளின்படி சோபியாவுடனான சம்பவம் விமான நிலையத்தில் நடந்துள்ளது. விமான நிறுவனமோ, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளோ இது ஒரு பிரச்சனை என்று சொல்லவில்லை. அதனால் இதில் போலி செய்தி என்னவென்றால் 'airgraft' பகுதி தான் என்று ட்வீட்டியுள்ளார் சித்தார்த்.
சித்தார்த்
சோபியா பற்றி தமிழிசை சவுந்தரராஜன் கூறியதை குறிப்பிட்டு இது தான் இந்திய அரசியலில் உள்ள பலரின் குணம். பாசிச பாஜக அரசு ஒழிக என்று ஒருவர் மட்டும் கோஷமிடவில்லை என்கிறார் சித்தார்த்.
ஒழிக
பாஜக பாசிச அரசு ஒழிக என்று நாங்களும் சொல்வோம் என்று சில திரையுலக பிரபலங்கள் தெரிவித்துள்ள நிலையில் சித்தார்த் இப்படி ட்வீட் செய்ததை பார்த்தவர்கள் நீங்களுமா பாஸ் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
கோபம்
விமான நிலையத்தில் கோபப்பட்டு பேசிய தமிழிசையின் வீடியோவையும் ரீட்வீட் செய்துள்ளார் சித்தார்த். இதற்காக பலர் சித்தார்த்தை பாராட்டினாலும் சிலர் அவரை திட்டித் தீர்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











