வைரம் பதிக்கப்பட்ட செல்போன் உபயோகிக்கும் தருண் கோபி
இயக்குநரும் நடிகருமான தருண் கோபி வைரம், பிளாட்டினத்தால் ஆன விலை உயர்ந்த செல்போனை உபயோகிக்கிறாராம்.
திமிரு, காளை போன்ற படங்களை இயக்கியவர் தருண் கோபி. மாயாண்டி குடும்பத்தார், பேச்சியக்கா மருமகன் போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்போது கரண் உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் விலையுர்ந்த செல்போன் ஒன்றை பயன்படுத்தி வருகிறார். லண்டனில் தயாரிக்கப்பட்ட இந்த போனின் விலை சுமார் ரூ.8 லட்சமாம். இந்த செல்போன் வைரம் மற்றும் பிளாட்டினத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா உலகில் அதிக விலைய உயர்ந்த போனை பயன்படுத்தும் நடிகர் இவர் தான் கூறப்படுகிறது. இவரைப்போன்று இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜூம் மிக விலையுர்ந்த போனை பயன்படுத்தி வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











