சிவகார்த்திகேயனை முந்திய தேஜா சஜ்ஜா.. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா 100 கோடி வசூல் செய்த மிராய்!

ஹைதராபாத்: கல்யாணி பிரியதர்ஷனின் லோகா திரைப்படம் 250 கோடி வசூலை தாண்டி ஆல் டைம் நம்பர் ஒன் மலையாள படமாகவே மாறப்போகிறது. இந்த பக்கம் தெலுங்கில் தேஜா சஜ்ஜா நடித்து கடந்த செப்டம்பர் 12ம் தேதி வெளியான மிராய் திரைப்படம் அதிரடியாக 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

முன்னதாக சிவகார்த்திகேயனின் மதராஸி படத்துக்குப் போட்டியாக செப்டம்பர் 5ம் தேதி தான் மிராய் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைசியில், போட்டி இல்லாமல் ஒரு வாரம் கழித்து வெளியானது.

Tejja Sajja s beats Sivakarthikeyan s Madharaasi at the Box Office and enters 100 Crore Club
Photo Credit:

தனது சூப்பர் ஹீரோ இமேஜ்க்கு ஏற்ப, தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கி வருகிறார் தேஜா சஜ்ஜா. தயாரிப்பாளர்களுக்கு மாபெரும் லாபத்தைத் தரும் விதமாக, அவர் நடித்த "மிராய்" திரைப்படம் தற்போது சென்சேஷனல் ஹிட்டாகி வருகிறது. கார்த்திக் கட்டமனேனி இயக்கத்தில், டி.ஜி. விஸ்வ பிரசாத் - கீர்த்தி பிரசாத் தயாரிப்பில், பீப்பிள் மீடியா ஃபேக்டரி பேனரில் உருவான இந்த படம் வசூலில் பல சாதனைகளை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

100 கோடி வசூல் செய்த மிராய்: "மிராய்" வெளியான 5 நாட்களில் ரூ.100 கோடி வசூலைத் தாண்டியுள்ளது. ஹனுமான் படத்துக்குப் பிறகு, இந்த மைல்கல்லை எட்டிய தேஜாவின் இரண்டாவது படமாகும். புக் மை ஷோ பிளாட்ஃபார்மில் தொடர்ந்து இப்படம் முதலிடத்தில் உள்ளது. நேற்று மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. அத்துடன், அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் $2 மில்லியன் கிளப்பைத் தாண்டியுள்ளது. அங்கேயும் ஹனுமானுக்குப் பிறகு, இந்த சாதனையை எட்டிய தேஜாவின் இரண்டாவது படம் இதுவாகும்.

Tejja Sajja s beats Sivakarthikeyan s Madharaasi at the Box Office and enters 100 Crore Club
Photo Credit:

சாதித்துக்காட்டிய தேஜா சஜ்ஜா: சவாலான ஆக்ஷன் கதாப்பாத்திரத்தில் மீண்டும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள தேஜா சஜ்ஜாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. வில்லனாக நடித்த மனோஜ் மஞ்சு மற்றும் தாயாக நடித்த ஷ்ரேயா சரண் ஆகியோரும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளனர். கதாநாயகியாக நடித்த ரித்திகா நாயக், தனது வலுவான நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். வெறும் 60 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் மதராஸி படத்தின் வசூலை முறியடித்துள்ளது.

இயக்குநரின் அபார உழைப்பு: எழுத்து, இயக்கம், ஒளிப்பதிவு - மூன்று முக்கிய பங்குகளை ஒரே நேரத்தில் வகித்த கார்த்திக் கட்டமனேனியின் உழைப்பு இப்போது மிகப்பெரிய வெற்றியாக மாறியுள்ளது. தயாரிப்பாளர்கள் தரத்தில் உலகத் தரத்திற்கு இணையான படைப்பை வழங்கியுள்ளனர். இசையமைப்பாளர் கௌரா ஹரியின் அதிரடி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஹனுமானை முந்துமா?: பெரிய திரையில் காண வேண்டிய கதை சொல்லலும், கண்கவர் காட்சிகளும் கொண்ட மிராய், மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையில் ரசிகர்களை ஈர்க்கிறது. மேலும், இரண்டாவது வாரத்தில் பெரிய போட்டி எதுவும் இல்லாததால், வரும் நாட்களில் படத்தின் வசூல் சாதனைகள் இன்னும் அதிகரிக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. இருப்பினும் ஹனுமான் படத்தின் 300 கோடி ரூபாய் வசூலை மிராய் அடைவது சிரமம் தான். 150 முதல் 200 கோடி வரை வசூல் வரும் என்கின்றனர். பிரபாஸின் வாய்ஸ் ஓவர், சிஜி, ராமாயணம் கனெக்‌ஷன் உள்ளிட்டவை படத்துக்கு கைகொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X