Kamal Haasan: பைடி ஜெய்ராஜ் விருது.. கமல்ஹாசனை கெளரவப்படுத்திய தெலங்கானா முதல்வர்!
ஹைதராபாத்: தெலுங்கானாவின் உயரிய விருதான 'பைடி ஜெய்ராஜ்' விருது, ஹைதராபாத்தில் நடைபெற்ற 'தெலுங்கானா கட்டர் திரைப்பட விருதுகள் 2025' விழாவில், நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. மார்ச் 19, 2026 அன்று நடந்த இந்த நிகழ்வு, இந்திய திரையுலக ஜாம்பவானை கௌரவித்தது.
இந்தியத் திரையுலகில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகக் கமல்ஹாசன் ஆற்றிவரும் மகத்தான பங்களிப்பைப் பாராட்டும் விதமாக இவ்விருது வழங்கப்பட்டது. சினிமா முன்னோடி பைடி ஜெய்ராஜ் பெயரில் அமைக்கப்பட்ட இந்த விருது, சாகர சங்கமம், சுவாதி முத்யம் போன்ற அவரது காலத்தால் அழியாத தெலுங்குப் படங்களுக்காகப் பெரிதும் அங்கீகரித்தது.

தெலுங்கானா முதலமைச்சர் அனுமுலா ரேவந்த் ரெட்டி அவர்கள் இந்த விருதை கமல்ஹாசனுக்கு வழங்கிச் சிறப்பித்தார். இன்றைய 'பான்-இந்தியா சினிமா' கொண்டாட்டங்களுக்கு உண்மையான அஸ்த்திவாரமிட்டவர் கமல் என்பது இவரது பன்மொழிப் பங்களிப்பு மூலம் முன்னிறுத்தப்பட்டது. புதிய கதைக்களங்கள், மாறுபட்ட கதாபாத்திரங்கள், தொழில்நுட்பப் புரட்சிகள் என இந்திய சினிமாவை அவர் தொடர்ச்சியாகச் செதுக்கி வருவதையும் இவ்விருது எடுத்துரைத்தது.
கல்கி படத்தில் மிரட்டிய கமல்: பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி 2898 ஏடி படத்தில் பல வருடங்கள் கழித்து அமிதாப் பச்சன் உடன் கமல்ஹாசன் நடித்திருந்தார். முதல் பாகத்தில் வெறும் 4 சீன்களுக்கு மட்டுமே கமல் வந்தாலும், அவரது மிரட்டலான வில்லத்தனம் அந்த படத்தை மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படமாக மாற்றியது. கல்கி படத்தின் 2ம் பாகத்திலும் தற்போது கமல் நடித்து வருகிறார். அதற்கான லுக்கில் தான் தற்போது கமல்ஹாசன் இருந்து வருகிறார்.

கெளரவப்படுத்திய டோலிவுட்: விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் 2 ஃப்ளாப் ஆனது. இந்தியன் 3 ரிலீஸ் ஆகமுடியாமல் தவித்து வருகிறது. ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தை தயாரித்து வரும் கமல் அவருடன் இணைந்தும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். கோலிவுட்டில் நிலைமை இப்படியிருக்க டோலிவுட்டில் கமலை அழைத்து அரசு விருதை வழங்கி கெளரவப்படுத்தியுள்ளனர். ரேவந்த் ரெட்டி மற்றும் நாகார்ஜுனா இணைந்து கமல்ஹாசனுக்கு தெலுங்கானாவின் உயரிய விருதான 'பைடி ஜெய்ராஜ்' விருதை வழங்கினர்.


Click it and Unblock the Notifications











