Thalapathy 69 - அய்யய்யோ.. தளபதி 69 படத்தை இயக்கப்போவது வெற்றிமாறன் இல்லையா?.. வாரிசு மாதிரி வந்துடுமோ?
சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. அப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பதற்கு கமிட்டானார். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. இந்தச் சூழலில் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
விஜய் நடிப்பில் வெளியான லியோ விமர்சன ரீதியாக அடிவாங்கியது. எனவே அதனை சரிசெய்யும் பொறுப்பில் இருக்கிறார் அவர். அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் அவர். வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான கஸ்டடி படம் படுதோல்வியை சந்தித்தது. இருந்தாலும் எப்படி விஜய் அவர் இயக்கத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார் என்ற சந்தேகம் விஜய் ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால் கஸ்டடி ரிலீஸுக்கு முன்னதாகவே விஜய்யிடம் கதை சொல்லி வெங்கட் பிரபு ஓகே வாங்கிவிட்டாராம்.

GOAT: படத்துக்கு GOAT (Greatest Of All Time)என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பிரசாந்த் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ எண்ட்ரி கொடுப்பதாலும், விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைந்திருப்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருக்கிறது.
விறுவிறு ஷூட்டிங்: படத்தின் பூஜை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் போடப்பட்டு அங்கு ஒரு பாடல் காட்சியும் ஷூட் செய்யப்பட்டது. அதனையடுத்து தாய்லாந்து, துருக்கி நாடுகளில் ஷூட்டிங் நடத்தப்பட்டது. தொடர்ந்து வேறு ஒரு லொக்கேஷனில் ஷூட்டிங் நடத்த படக்குழு திட்டமிட்டது. ஆனால் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரின் சகோதரி பவதாரிணி உயிரிழந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கி நடந்துவருகிறது.
தமிழக வெற்றி கழகம்: சூழல் இப்படி இருக்க சமீபத்தில் விஜய் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டு, தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக தெரிவித்தார். மேலும் மக்கள் பணியில் ஈடுபடவிருப்பதால் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடிப்பேன் என்றும், 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்றும் அறிவித்திருந்தார். விஜய்யின் அரசியல் எண்ட்ரி அவரது ரசிகர்களிடையே சந்தோஷத்தை கொடுத்தாலும் படம் நடிக்கமாட்டேன் என்று அவர் கூறியது கொஞ்சம் வருத்தத்தை கொடுத்திருக்கிறது.
கடைசி படம்: இந்நிலையில் விஜய்யின் கடைசி படம் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. அதன்படி அந்தப் படத்தை வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், அட்லீ, ஹெச்.வினோத் ஆகிய நான்கு பேரில் ஒருவர் இயக்குவார்கள் என்றும்; அநேகமாக அந்த வாய்ப்பை வெற்றிமாறன் தட்டி செல்ல வாய்ப்புகள் அதிகம் என்றும் கோலிவுட்டில் பேச்சு ஒன்று கடந்த சில நாட்களாகவே ஓடியது. முக்கியமாக அந்தப் படத்துக்காக வாடிவாசல் படத்தை மேற்கொண்டு தாமதப்படுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகின.
வெற்றி இல்லையாம்: இந்நிலையில் தளபதி 69 படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி அந்தப் படத்தை தெலுங்கு இயக்குநர் திரிவிக்ரம் இயக்கவிருப்பதாகவும் அதுகுறித்த பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. திரிவிக்ரம் தெலுங்கில் ஃபேமஸான இயக்குநராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது இயக்கத்தில் கடைசியாக குண்டூர் காரம் வெளியாகி சக்கைப்போடு போட்டது குறிப்பிடத்தக்கது. வெற்றிமாறன் விஜய்யின் கடைசி படத்தை இயக்குவார் என்று வெளியான தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. ஆனால் இப்போது இந்தத் தகவலை கேள்விப்பட்ட அவர்கள், கடைசி படத்தை ஏன் தளபதி தெலுங்கு இயக்குநருக்கு கொடுக்கிறார். வாரிசு மாதிரி இந்தப் படமும் வந்துட்டா தாங்கிக்கொள்ளவே முடியாதே என்று ஓபனாகவே கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











