Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அசத்தும் சூப்பர் ஸ்டார்: ஹாட்ன்னு கேப்ஷன் போட்டு சூடேற்றிய பிரபலம்!
ஐதராபாத்: தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு கடந்த 9ம் தேதி தனது 47வது பிறந்தநாளை கொண்டாடினார்.
திரிவிக்ரம் இயக்கத்தில் தனது 28வது படத்தில் நடித்து வரும் மகேஷ் பாபு, அடுத்து ராஜமெளலியுடன் இணைகிறார்.
இந்நிலையில், இணையத்தில் வைரலாகும் மகேஷ் பாபுவின் புதிய லுக் போட்டோவுக்கு விதவிதமான கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகின்றன.
Mahesh
Babu
Birthday:
பிரைவேட்
ஜெட்,
பங்களா
வீடு,
சொகுசு
கார்..
மகேஷ்
பாபுவின்
சொத்து
மதிப்பு
இதோ!

டோலிவுட் சூப்பர் ஸ்டார்
தெலுங்குல் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ள மகேஷ் பாபு, 1999ல் வெளியான 'ராஜகுமாருடு' படத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து 'யுவராஜு', 'வம்சி', 'போபி', 'ஒக்கடு', 'போக்கிரி' 'கலேஜா' என சூப்பர் ஹிட் படங்களில் நடித்து, தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கலக்கி வருகிறார். மகேஷ் பாபுவின் நடிப்பு குறித்து பலவித விமர்சனங்கள் எழுத்தாலும், அவருக்கு ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஆக்சன், காதல், சென்டிமெண்ட்
தமிழில் விஜய்யின் ரூட்டை அப்படியே தெலுங்கில் மகேஷ் பாபு ஃபாலோ அப் செய்து வருவதாகவும் சொல்லப்படுவது உண்டு. அதிகமாக கமர்சியல் படங்களில் மட்டுமே கமிட் ஆகும் மகேஷ் பாபு, ஆக்சன், காதல், சென்டிமெண்ட் என எல்லாவற்றையும் வைத்தே ஒரு படத்தை முடிவு செய்கிறார். மகேஷ் பாபுவின் படங்களை தமிழில் விஜய்யும், விஜய்யின் படங்களை தெலுங்கில் மகேஷ் பாபுவும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆல் ரவுண்டர் மகேஷ்காரு
கமர்சியல் ஹீரோவுக்கான அத்தனை அம்சங்களும் உள்ள மகேஷ் பாபு, ஆக்சன் காட்சிகளில் அனல் வேகத்தில் அதிரடி காட்டுவார். அதேபோல், டான்ஸிலும் புதிதாக பல ஸ்டெப்களை போட்டு ரசிகர்களுக்கு ஸ்மார்ட்டாக வெரைட்டிக் காட்டுவார். மொத்தத்தில் டோலிவுட்டின் ஆல் ரவுண்டராக அமர்க்களம் செய்துவரும் மகேஷ் பாபுவின் நடிப்பில் இறுதியாக 'சர்காரு வாரி பாட்ட' திரைப்படம் வெளியாகியிருந்தது.

அடுத்தடுத்து மெகா கூட்டணி
தற்போது தனது 28வது படத்திற்காக இயக்குநர் திரிவிக்ரமுடன் கூட்டணி வைத்துள்ளார் மகேஷ் பாபு. இருவருக்குள்ளும் நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதால், கண்டிப்பாக இந்தப் படம் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து முதன்முறையாக ராஜமெளியின் படத்தில் நடிக்கவுள்ளார் மகேஷ் பாபு. இதுகுறித்து சமீபத்தில் பேசியிருந்த அவர், 'ராஜமெளலி இயக்கத்தில் நடிப்பது, ஒரேநேரத்தில் 25 படங்களில் நடிப்பதற்கு சமம்" எனத் தெரிவித்திருந்தார்.

ஸ்மார்ட் லுக்கில் மகேஷ் பாபு
திரிவிக்ரம் இயக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்ட நிலையில், மகேஷ் பாபு தனது புதிய போட்டோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். இதில், கொஞ்சம் நீளமான தலைமுடி, சால்ட் அண்ட் பெப்பர் லுக் என செம்ம ஸ்மார்ட்டாக இருக்கிறார் மகேஷ் பாபு. இந்த போட்டோவிற்கு ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். ஆனால், அவரது மனைவி நர்மதா, "you're looking too hot" என சூடான கேப்ஷன் போட்டு, அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த போஸ்ட் மகேஷ் பாபு ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.