twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹீரோ .. ஹீரோ ..

    By Staff
    |

    தெனாலி - கமல்ஹாசன் நடிக்க டைரக்டர் கே.எஸ். ரவிகுமார் தயாரித்து டைரக்ட் செய்யும் படம் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி.

    கமலுக்கு இரண்டு கதாநாயகிகள் என்பதும் தெரிந்த விஷயம்தான். இப்போது கே.எஸ். ரவிக்குமாரிடமிருந்து தெனாலி படத்தைப் பற்றி கறந்தமேலும் பல தகவல்கள் இங்கே உங்களுக்காக...

    1.முதன்முறையாக ஏ.ஆர். ரஹ்மான் இசையில் கலைக்குமார், அறிவுமதி, பிறைசூடன், இளையகம்பன் ஆகியோர் பாடல் எழுதுகின்றனர். ஆஸ்தானகவிஞர் வைரமுத்து ஒரு பாடல் கூட எழுதவில்லை. படத்தின் அனைத்துப் பாடல்களையும் தானே எழுதுவதாக வைரமுத்து கூற, அதை ஏ.ஆர். ரஹ்மான்ஏற்றுக் கொள்ளவில்லை. அடுத்த படத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார்.

    2. படத்தில் மொத்தம் 6 பாடல்கள். இதுவரை 3 பாடல்களை ரெடி செய்து கொடுத்துவிட்டார் ஏ.ஆர். ரஹ்மான். மீதமுள்ள 3 பாடல்களை அவர் தரதாமதம் ஆகும் என்பதால் படம் ரிலீஸ் ஆகும் தேதி தீபாவளிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    3. இலங்கை வானொலி (பாட்டுக்குப் பாட்டு) புகழ் அப்துல் ஹமீது, மீனா இருவரும் கெஸ்ட் ரோலில் நடிக்கின்றனர்.

    4. படத்தில் கமலஹாசன் இலங்கைத் தமிழில் "கதைத்து பேசி நடிக்கிறார். அதற்காக அவர், அதிக சிரமம் எடுத்து வீட்டில் ஒரு பயிற்சியாளரை வைத்துஇலங்கைத் தமிழ் கற்றுக் கொண்டார்.

    5. பலர் பரப்பிவிட்டதைப் போல் படத்தில் மனநோயாளியாகக் கமல் நடிக்கவில்லை. பயந்தாங்கொள்ளியாக நடிக்கிறார்.

    6. முத்து படத்தில் ரஜினியை அடிக்கும் காட்சியில் நடிக்க மறுத்த மலையாள நடிகர் ஜெயராம் - இப் படத்தில் கமலஹாசனை அடிக்கிற காட்சியில்நடித்திருக்கிறார். அதற்கு, கமல் எனது நெருங்கிய நண்பர். சாணக்கியன் படத்தில் இருவரும் நாயே, பேயே என்று திட்டி நடித்திருக்கிறோம் என்று காரணம்சொல்கிறார் ஜெயராம்.

    7. படத்தில் மொத்தள்ள 6 பாடல்களில் ஜெயராம்-தேவயானி ஜோடிக்கு இரண்டு பாடல் காட்சி உண்டு. இரண்டே இரண்டு சண்டைக் காட்சிகள்தான்.

    8. கமல் நடிப்பதால் முத்தக் காட்சி இருக்கும் என்று எதிர்பார்ப்பவர்கள் நிச்சயம் ஏமாறுவார்கள். படத்தில் ஒரு முத்தக் காட்சி கூட இல்லை(என்னய்யா அநியாயம் இது!).

    9. வெளிநாட்டில் படப்பிடிப்பு இல்லை. எல்லா காட்சிகளும் உள்நாட்டுத் தயாரிப்புகள்தான். (பி இன்டியன், பை இன்டியன் ரவிக்குமார்). வெளிநாட்டில் நடனக்காட்சி எடுத்தால் பிரம்மாண்டமாக எடுக்கமுடியாது. அதிகபட்சம் 20 நடனப் பெண்களையே அழைத்துச் செல்லமுடியும். இங்கே எடுத்தால் 200 முதல்500 பேரை வைத்து நடனக் காட்சிகளை எடுக்கமுடியும் என்கிறார் ரவிக்குமார்.

    Read more about: actor ajit cinema injured
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X