ஏன் இப்படி செய்றீங்க?.. என்னை விட்டுடுங்க.. தாய் கிழவி விழாவில் போட்டுடைத்த சிவகார்த்திகேயன்.. என்ன நடந்தது?

சென்னை: சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடித்திருக்கும் படம் தாய் கிழவி. எஸ்கே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரித்திருக்கிறார். 27ஆம் தேதி படம் வெளியாகவிருக்கும் நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இவ்விழாவில் சிவகார்த்திகேயன் பேசியது மிகப்பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறது.

ஆண்பாவம் பொல்லாதது படத்தின் கதாசரியர் சிவக்குமார் முருகேசன் இயக்கியிருக்கும் படம் தாய் கிழவி. இதில் ராதிகா சரத்குமார் லீட் ரோலில் நடித்திருக்கிறார். அவருடன் இளவரசு, அருள்தாஸ், சிங்கம்புலி, பால சரவணன், ரேச்சல் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கும் இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். 20ஆம் தேதி வெளியாகவிருந்த படம் சில காரணங்களால் 27ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் ப்ரீமியர் ஷோவை பார்த்த கமல்; இந்தப் படத்தை பற்றி நான் சொல்வதைவிட மக்கள் சொல்வார்கள். சிவக்குமார் முருகேசன் சிறப்பான இயக்குநர் என புகழ்ந்திருந்தார்.

Thaai Kizhavi Pre release event Sivakarthikeyan s Emotional Speech Wins Hearts
Photo Credit:

ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்: படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியான சூழலில்; ப்ரீ ரிலீஸ் விழா சென்னையில் நடந்தது. இதில் ராதிகா, சிவகார்த்திகேயன், ஸ்ரீபிரியா, சரத்குமார், சூரி, இரா. சரவணன், சிபி சக்கரவர்த்தி, கார்த்திக் வேணுகோபால் என பலர் கலந்துகொண்டார்கள். அனைவருமே படத்தையும், படத்தின் இயக்குநரையும், சிவகார்த்திகேயனையும் புகழ்ந்து பேசினார்கள். விழாவில் எஸ்கேவின் பேச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சிவகார்த்திகேயன் பேச்சு: சிவா இந்த விழாவில் பேசுகையில், "நான், அருண்ராஜா காமராஜ் எல்லாம் மிகப்பெரிய கனவோடு திருச்சியிலிருந்து சென்னைக்கு வந்தவர்கள். என்னை மக்கள் வெல்ல வைத்தார்கள். அதனால் ஹீரோவாகிவிட்டேன். ஆனால் அருண் இயக்குநர் ஆகாமலேயே இருந்தார். நாம் வென்றுவிட்டோம்; ஆனாலும் அருண் இன்னமும் இயக்குநர் ஆகாமல் இருக்கிறாரே என்று தோன்றியது. எனவேதான் எஸ்கே புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்தோம். எனக்கு நீங்கள் கொடுத்த மேடையை இன்னும் விரிவாக்கி அதில் சில பேரை சேர்த்துக்கொள்ள விரும்பினேன்.

Also Read
தலைவர் 173 இயக்குநரை சிவகார்த்திகேயன் இப்படி கலாய்க்கிறாரே.. பவுன்சர் வேலையெல்லாம் பார்க்குறாரு
தலைவர் 173 இயக்குநரை சிவகார்த்திகேயன் இப்படி கலாய்க்கிறாரே.. பவுன்சர் வேலையெல்லாம் பார்க்குறாரு

மிகப்பெரிய ரெஸ்பான்ஸ்: கனா படம்தான் உலகத்திலேயே பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் திரைப்படம். அதேபோல் யூடியூபர்கள் எல்லாம் சேர்ந்து செய்த முதல் படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா. அதேபோல் பி.எஸ்.வினோத்ராஜை இயக்குநராக அறிமுகம் செய்து கொட்டுக்காளி படத்தை எடுத்தோம். அந்த படத்தை ஏன் தியேட்டர்களில் ரிலீஸ் செய்தீர்கள் என கேட்டார்கள். ஏன் செய்யக்கூடாது. பெர்லின், ரஷ்யா, ஜப்பான் நாடுகளில் எல்லாம் ரிலீஸ் செய்தேன். அந்த ஜானரில் மக்கள் படங்களை தியேட்டர்களில் பார்த்து பழக வேண்டும் என்றுதான் அப்படி செய்தேன். கொட்டுக்காளிக்கு அந்த நாடுகளில் எல்லாம் மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்தது.

ஏன் இப்படி செய்றீங்க?: இதற்காகத்தான் நான் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினேன். இதுவரை நான் ரீமேக் படங்களில் நடித்ததே இல்லை. கதை கேட்டுத்தான் நடித்திருக்கிறேன். எனவே ஒரு படத்தின் வெற்றி தோல்வியில் எனக்கு பொறுப்பு இருக்கிறது. எனக்கு வாழ்வு கொடுத்த சினிமாவுக்கு எதாவது செய்ய வேண்டும் என்றுதான் இந்த மாதிரியான படங்களை செய்கிறேன்.மாறாக யாரையும் தாண்ட வேண்டும்; அட்டாக் செய்ய வேண்டும் என்று நான் வரவில்லை. எனக்கு இருக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்த நினைக்கிறேன். அதற்கு மக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள். சினிமாவில் இருக்கும் சிலர்தான் தடையாக இருக்கிறார்கள். அந்தத் தடையை தாண்டி வர நான் ரெடி. ஏன் இப்படி செய்கிறீர்கள். என்னை இப்படியே விட்டுவிட்டால் இன்னும் நான்கு சிவக்குமார் முருகேசன்களை எங்கிருந்தாலும் தேடி கண்டுபிடித்து அழைத்துவருவேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X