பாப்கார்ன் வேணும்.. சிவகார்த்திகேயனிடம் அடம் பிடித்த மனைவி ஆர்த்தி.. தாய் கிழவி ஷோவில் நடந்ததை பாருங்க
சென்னை: தாய் கிழவி படம் ப்ரீமியர் ஷோவில் ஏகப்பட்ட பாசிட்டிவ் ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இன்னொரு தரமான படமாக அமைந்திருக்கிறது. இன்று தியேட்டர்களில் ரிலீஸாகவிருப்பதால்; படத்தை பார்க்க மக்களிடமும் ஆவல் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் தாய் கிழவி ஷோவில் ஆர்த்தி - சிவகார்த்திகேயன் தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
ராதிகா சரத்குமார் இந்திய அளவில் சிறப்பான நடிகை. கடந்த பல வருடங்களாகவே ஏகப்பட்ட முறை சிறப்பான நடிப்பை தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார். ஆனாலும் அவருக்கு சரியான அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை. இருப்பினும் அதையெல்லாம் அவர் கண்டுகொள்வதாக இல்லை. எம்.ஆர்.ராதா மகள் என்பதை தனது நடிப்பில் மட்டுமின்றி; இதுபோன்ற விருது விவகாரங்களை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்வதிலும் நிரூபிக்கிறார் அவர்.
தாய் கிழவி ராதிகா: இப்போது அவர் தாய் கிழவி படத்தில் நடித்திருக்கிறார். எஸ்கே புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரிக்க; சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது படம். இதில் இளவரசு, தம்பி இராமையா, அருள்தாஸ், பாலசரவணன், முத்துக்குமார், முனீஸ்காந்த், ரேச்சல் என பலர் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இன்று தியேட்டர்களில் படம் வெளியாகவிருக்கிறது.

ப்ரீமியர் ஷோவில் படம் சூப்பர் ரெஸ்பான்ஸ்: சில வாரங்களுக்கு முன்பு கமல்ஹாசனுக்கு படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்துவிட்டு அவரும் தன் பங்குக்கு பாராட்டி தள்ளிவிட்டார். அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் திரையுலக பிரபலங்களுக்கு ப்ரீமியர் ஷோ திரையிடப்பட்டது. அதில் சூர்யா, ஜோதிகா, பிரபு, ஸ்ரீபிரியா, ராதா, அதர்வா என பலர் கலந்துகொண்டு படம் பார்த்தார்கள். அவர்களும் உச்சபட்சமாக படத்தை பாராட்டியிருக்கிறார்கள்.
மெகா ஹிட் உறுதி: ப்ளூ சட்டை மாறனேகூட தனது விமர்சனத்தில் படத்தை பாராட்டவே செய்திருக்கிறார். இப்படி அனைவரும் பாராட்டுவதால் இந்தப் படம் கண்டிப்பாக இன்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமின்றி இத்தனை வருடங்கள் கிடைக்காத தேசிய விருது நிச்சயம் இப்படத்தின் மூலம் ராதிகாவிடம் வந்து சேரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வரவில்லை என்றால் உறுதியாக விருது வழங்குபவர்களுக்கு ரசனையும், நேர்மையும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் தாய் கிழவி ஷோவை சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தியும் பார்த்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது ஷோ ஆரம்பிப்பதற்கு கொஞ்ச நேரமே இருக்கும் நிலையில் சிவாவிடம் ஆர்த்தி பாப்கார்ன் வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு எஸ்கேவோ தனது கை கடிகாரத்தை பார்த்து, 'நேரம் ஆகிவிட்டது' என்பது போல் சொல்ல; பதிலுக்கு ஆர்த்தியும் தன்னுடைய கை கடிகாரத்தை பார்த்து, 'நேரமெல்லாம் இருக்கிறது' என்பது போல் சொல்கிறார். உடனே ஆர்த்தியை அழைத்துக்கொண்டு கேண்டீனுக்கு செல்கிறார் சிவா. இதை கண்ட ரசிகர்கள், 'அட பாப்கார்ன் வாங்குவதற்குதான் இவ்வளவு டிஸ்கஷனா? அடம் பிடித்து நினைத்ததை ஆர்த்தி சாதித்துவிட்டாரே' என ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். மேலும் அதை வைத்து பலரும் மீம்ஸ்களையும் க்ரியேட் செய்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications















