தடம்.. மனைவியிடம் ஓகே வாங்கி ‘லிப்லாக்’ காட்சியில் நடித்த அருண் விஜய்.. ஆனா, டேக் மட்டும் 13!

அருண் விஜய் நடித்துள்ள தடம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

Recommended Video

மனைவியின் சம்மதத்துடன் லிப்லாக் காட்சியில் நடித்த அருண் விஜய்- வீடியோ

சென்னை : தடம் படத்தில் லிப்லாக் காட்சி ஒன்றில் நடிக்க மறுத்த அருண் விஜய், பின்னர் தனது மனைவியின் சம்மதத்துடன் அதில் நடித்ததாக தெரிவித்துள்ளார்.

'செக்கச்சிவந்த வானம்' படத்துக்கு பிறகு அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள க்ரைம் த்ரில்லர் படம் 'தடம்'. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார்.

இதில் முக்கிய கதாபாத்திரங்களில் தான்யா, ஸ்ம்ருதி, வித்யா பிரதீப், சோனியா அகர்வால், யோகி பாபு நடித்துள்ளனர். 'ரேதன் - தி சினிமா பீப்பிள்' நிறுவனம் தயாரித்துள்ள இதற்கு அருண்ராஜ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.

லிப்லாக் காட்சி:

லிப்லாக் காட்சி:

அப்போது பேசிய அருண் விஜய், "இப்படத்தில் ஒரு லிப் லாக் காட்சி இருந்தது. அதில் நடிக்க முடியாது என நான் கூறிவிட்டேன். ஆனால், இயக்குநர் விடவில்லை. என் மனைவியின் அனுமதி பெற்று அந்தக் காட்சியில் நடித்தேன்" என்றார்.

அதிக டேக்குகள்:

அதிக டேக்குகள்:

அருண் விஜய் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இடையில் பேசிய மகிழ் திருமேனி, "ஆனால் அந்தக் காட்சியில் நடிக்க அருண் விஜய் 13 டேக்குகள் வாங்கினார். அந்தக் காட்சியால் எனக்கு சென்சாரிலும் மிகப் பெரிய பிரச்சினை ஏற்பட்டு விட்டது.

சென்சாரில் கேள்வி:

சென்சாரில் கேள்வி:

கேமரா மேன் எந்த ஆங்கிளில் அந்த முத்தக்காட்சியைப் பதிவு செய்தார் எனத் தெரியவில்லை. சென்சாரில் பார்த்து விட்டு அருண் விஜய், நாயகியின் உதட்டைக் கடித்தாரா எனக் கேள்வி மேல் கேள்வி கேட்டனர். இல்லை என அவர்களுக்குப் புரிய வைப்பதற்குள் எனக்குப் போதும் போதுமென ஆகிவிட்டது" எனத் தெரிவித்தார்.

கலகலப்பாக நடந்த நிகழ்ச்சி:

கலகலப்பாக நடந்த நிகழ்ச்சி:

இதனைக் கேட்டு சிரித்த அருண் விஜய், "என் மனைவியும் இந்த விழாவுக்கு வந்திருக்காங்க. குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்காதீங்க" என ஜாலியாகக் கூறினார். விழாவுக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் இதைக் கேட்டு சிரித்தனர். இப்படியாக கலகலப்பாக தடம் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X