அதாரு..அதாரு.. உதாரு.. உதாரு... தல அதிரடி ஓபனிங்

By Mayura Akilan

கௌதம் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்தில் அஜீத்துக்கு அறிமுகப் பாடல் உள்ளது.

அஜீத்தும், அருண் விஜய்யும் இடம்பெறும் இந்தப் பாடலை போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவா எழுதியிருந்தார்.

ஏற்கனவே இவர் தான் இயக்கிய ‘போடாபோடி' படத்திலும் கிருத்திகா உதயநிதி இயக்கிய ‘வணக்கம் சென்னை' படத்திலும் கூட பாடல்கள் எழுதியிருக்கிறார்.

இவரை அழைத்த கௌதம் மேனன் சென்னை பாஷையில் அதேசமயம் குத்துப்பாடலாக இல்லாதபடி ஒரு பாடல் எழுதவேண்டுமென்று கேட்டாராம்.

அதாரு... அதாரு

அதாரு... அதாரு

விக்னேஷ் சிவா தனது ஸ்டைலில்"அதாரு..அதாரு.. உதாரு..உதாரு.." என பாஸ்ட் பீட் பாடல் ஒன்றை எழுதி தர ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அந்த பாடலை அற்புதமாக படமாக்கியும் வந்துவிட்டார் கௌதம் மேனன்.

ஓபனிங் பாடல்

ஓபனிங் பாடல்

கௌதம் வாசுதேவ மேனன் நடிகர்களுக்கு ஓபனிங் பாடல் வைப்பதில் விருப்பமுடையவர் இல்லை. கமலின் தீவிர ரசிகர் என்பதால் வேட்டையாட விளையாடு படத்தில் கற்க கற்க எனத் தொடங்கும் அட்டகாசமான ஓபனிங் பாடலை வைத்தார்.

அஜீத்துக்கு ஓபனிங்

அஜீத்துக்கு ஓபனிங்

அதேபோல அஜீத்தை வைத்து இயக்கும் படத்திலும் ஒரு ஓபனிங் பாடலை வைத்துள்ளார். அதாரு அதாரு... உதாரு உதாரு... எனத்தொடங்கும் இந்தப் பாடலை வேட்டையாடு விளையாடு மாதிரி வித்தியாசமாகவும், சிறப்பாகவும் எடுத்துள்ளாராம் கௌதம். படத்தில் இந்த அறிமுகப்பாடல் ஹைலைட்டாக இருக்கும் என்கிறார்கள்.

சென்னை நகரில்

சென்னை நகரில்

அதாரு உதாரு பாடலை சென்னையின் முக்கியமான தெருக்களில் படமாக்கினார் கௌதம். அஜீத், அருண் விஜய் ஆடிப்பாடிய இந்தப் பாடலுக்கான நடனத்தை அமைத்தவர் சதீஷ். அதாரு உதாரு பாடல் சிறப்பா முடிந்துள்ளது என்று சதீஷ் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

படத்தோட பேரு என்னப்பா?

படத்தோட பேரு என்னப்பா?

அனுஷ்கா, த்ரிஷா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்துக்கு கௌதம் இன்னும் பெயர் வைக்காமலிருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். ஓபனிங் பாட்டெல்லாம் இருக்கட்டும் படத்தோட பேரை முதல்ல சொல்லுங்கப்பா என்கின்றனர் தல ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X