»   »  தள்ளிப் போகும் 'தல 57': ரம்ஜானுக்கு ரிலீஸ்?

தள்ளிப் போகும் 'தல 57': ரம்ஜானுக்கு ரிலீஸ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்தின் தல 57 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

வீரம், வேதாளம் ஆகிய படங்களை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் தல 57. படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்காததால் தற்காலிகமாக தல 57 என்கிறார்கள்.

Thala 57 to get postponed?

தல 57 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பொங்கலுக்கு வெளியாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக ரிலீஸாகும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகுதாம். தல 57 தமிழ் புத்தாண்டுக்கு அல்ல மாறாக ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது.

இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக காஜல் நடித்து வருகிறார். படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்து வருகிறது. பட்ஜெட் ஏற்கனவே ரூ.100 கோடியை தாண்டிவிட்டதாம்.

English summary
Ajith starrer Thala 57 release is reportedly getting postponed from April 14 to June as Ramzan special.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil