பொய்யி.. பொய்யி.. எல்லாம் பொய்யி.. தல 60 பத்தி வைரலான மேட்டர் சுத்த பொய்யி.. ரசிகர்கள் செம அப்செட்!

அஜித் நடிக்கும் தல 60 படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக வெளியான புகைப்படம் தவறானது எனத் தெரியவந்துள்ளது.

Recommended Video

ரகசியமாக தொடங்கிய அஜித்தின் 60 படப்பிடிப்பு-வீடியோ

சென்னை: தல 60 படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக இணையத்தில் வைரலான புகைப்படம் தவறானது எனத் தெரிய வந்துள்ளது.

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பாஸ் ஆபிசிலும் நல்ல வசூல் செய்தது. பிங்க் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான அப்படத்தை இயக்கியது எச்.வினோத். தயாரித்தது போனி கபூர்.

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக இந்த ரீமேக்கில் நடிக்க சம்மதித்தார் அஜித். ஆனால், அப்போதே அஜித்தின் அடுத்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார், வினோத் இயக்குகிறார் என அறிவிக்கப்பட்டது.

போலீசாக அஜித்

போலீசாக அஜித்

அதன்படி, ஆகஸ்ட் மாதம் நேர்கொண்ட பார்வை ரிலீசானதைத் தொடர்ந்து, அம்மாத இறுதியிலேயே தல 60 படம் தொடங்கும் என போனி கபூர் அறிவித்தார். தல 60 படத்தில் கார் ரேசர் மற்றும் போலீஸ் அதிகாரியாக அஜித் இப்படத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இளமையான தோற்றம்

இளமையான தோற்றம்

இதற்காக அஜித் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக ஆகியிருக்கிறார். அந்த போட்டோக்கள் சமீபத்தில் இணையத்தில் வைரலானது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இப்படத்தில் அஜித் கருமையான தலைமுடியும் இளமையான தோற்றத்தில் வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புகைப்படம் வைரல்

புகைப்படம் வைரல்

தல 60 என இப்படத்திற்கு தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி கடந்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. இதனால், இம்மாதம் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், அஜித் போலீஸ் கெட்டப்பில் படப்பிடிப்பில் கலந்து கொண்டது போன்ற புகைப்படம் ஒன்று நேற்று இணையத்தில் வைரலானது.

தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்

தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்

இதனால், தல 60 பட படப்பிடிப்பு சத்தமில்லாமல் தொடங்கி விட்டதாக தகவல் பரவியது. இந்த ஒரு போட்டோவும், தகவலும் போதாதா? உடனே தல ரசிகர்கள் தல 60 என ஹேஷ்டேக் போட்டு டிவிட்டரை தெறிக்கவிட்டு விட்டனர். படப்பிடிப்பு ஆரம்பமாகி விட்டதால் இனி அடிக்கடி அப்டேட் கிடைக்கும் என்ற கனவில் அவர்கள் இருந்தனர்.

அது பழைய படமாம்

அது பழைய படமாம்

ஆனால், அவர்களது சந்தோசத்தைக் குலைக்கும் வகையில் தற்போது ஒரு தகவல் தெரிய வந்துள்ளது. அது என்னவென்றால் நேற்று வைரலான புகைப்படம் அஜித்தின் வெறொரு படப்பிடிப்பில் எடுக்கப்பட்டதாம். தற்போது எடுக்கப்பட்ட புதிய புகைப்படம் இல்லை அது. இன்னமும் தல 60 படப்பிடிப்பு தொடங்கப்படவில்லையாம்.

ரசிகர்கள் அப்செட்

ரசிகர்கள் அப்செட்

தற்போது தான் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறதாம். எல்லாப் பணிகளும் முடிந்தபிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்பது தெரிய வந்துள்ளது. படக்குழுவின் இந்த விளக்கத்தால் தல ரசிகர்கள் அப்செட் ஆகிவிட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X