Just In
Don't Miss!
- Education
ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- News
அதிமுகவில் இருந்து விலகிய சமக...திமுகவில் இருந்து விலகிய ஐஜேகே - உருவானது புது கூட்டணி
- Automobiles
செம ஸ்பீடா எலெக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜ் ஆகும்... சென்னையில் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன் திறப்பு...
- Finance
3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..!
- Sports
சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்
- Lifestyle
இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
5 ஆண்டுகளுக்கு பிறகு கெட்அப்பை மாற்றி அஜித்...இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோ
சென்னை : அஜித், மிகவும் அரிதாகவே பொது இடங்களுக்கு வருவார். அப்படி அவர் வரும் போது, எடுக்கப்படும் போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டிங் ஆகும். இப்படியாக நிகழ்வு ஒன்று இன்று காலை நடந்தது.
அஜித் இன்று காலை சென்னை போஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு திடீரென வந்தார். தனிப்பட்ட விஷயமாக அவர் வந்ததாக கூறப்படுகிறது. காவலர்கள், அதிகாரிகள் சூழ வந்த போதும், அவருடன் செல்பி எடுக்க ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அஜித் மொட்டை தலையுடன் வந்தது தான். ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் வலிமை படத்தில் இன்னும் ஒரு சண்டை காட்சி மீதம் உள்ளது என படக்குழு கூறி வரும் நிலையில் அஜித், தனது கெட்அப்பை மாற்றி உள்ளார்.
அப்படியானால் வலிமை படத்தில் அஜீத் மொட்டை தலையுடன் வரும் காட்சிகள் இடம்பெற உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. எப்படியோ வலிமை படத்தின் அடுத்த அப்டேட்டை அஜித்தே வெளிப்படுத்தி உள்ளார்.
இதற்கு முன் வேதாளம் படத்திற்காக 5 ஆண்டுகளுக்கு முன் அஜித் மொட்டை தலை கெட்டப்புடன் இருந்தார். இப்போது மீண்டும் அதே கெட்அப்பில் வந்திருப்பதால் மேலும் சில காட்சிகளை வெளிநாட்டில் எடுக்க டைரக்டர் வினோத் திட்டமிட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது.
யாரும் எதிர்பாராத விதமாக நடந்த அஜித்தின் வருகையால் கமிஷனர் அலுவலகமே பரபரப்பானது. ஆனால் அவரது ரசிகர்களுக்கு இது இன்ப அதிர்ச்சியாகவே இருந்திருக்கும்.