வேற லெவல் தல...அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய அஜித்...எதில் தெரியுமா ?
சென்னை : தென்னிந்திய சினிமாவை பொருத்தவரை பெரிய நடிகர் மட்டுமல்ல பலரின் மனம் கவர்ந்த நடிகராகவும் இருப்பவர் தல அஜித். வருடத்திற்கு ஒரு என அஜித் நடித்தாலும், அதுவும் மெகாஹிட் படமாகவே அமைந்து விடுகிறது.
சமீப காலமாக வரிசையாக ஹிட் படங்கள் கொடுப்பத்தில் முக்கிய நடிகராக இருப்பவர் அஜித். நடிப்பு தவிர பைக் ரேஸ், ஏரோ ஸ்போர்ட்ஸ், சமையல் உள்ளிட்ட பல விஷயங்களில் அதிக ஆர்வம் கொண்டவர் அஜித்.
கடந்த சில ஆண்டுகளாக அஜித் துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் பயிற்சி எடுத்து வருகிறார். சென்னை எக்மோர் ரைபில் கிளப்பில் இவர் விஐபி உறுப்பினராக இருந்து வருகிறார்.

கோவை, டெல்லியில் நடந்த பல துப்பாக்கி சுடுதல் போட்டிகளிலும் அஜித் வெற்றி பெற்றுள்ளார். இவர் தற்போது ரைபில் லெவலில் இருந்து முன்னேறி, சூட்கன் மற்றும் டபிள் பேரல் கன் சூட்டிங் பிரிவுகளில் பயிற்சியில் எடுத்து வருகிறார்.
அதிக திறன் கொண்ட துப்பாக்கிகளில் சுடுவதற்கு பயிற்சி எடுத்து வரும் அஜித், அடுத்தபடியாக இந்த புதிய ஆயுதங்களை கையாளும் போட்டிகளிலும் பங்கேற்க உள்ளார்.
அஜித் தற்போது நடித்து வரும் வலிமை படத்தின் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. சண்டை காட்சியை படமாக்க விரைவில் படக்குழு வெளிநாடு செல்ல உள்ளது. இதற்கிடையில் தனக்கு கிடைக்கும் நேரங்களில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியிலும் அஜித் தவறாமல் ஈடுபட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











