'தல' இப்போ மொட்டை!

By Shankar

ரசிகர்களால் தல என அழைக்கப்படும் அஜீத், அடுத்த படத்தில் இந்தத் தோற்றத்தில் வருகிறார், அந்தத் தோற்றத்தில் வருகிறார் என்றெல்லாம் மீடியா செய்தி போட்டுக் கொண்டிருக்க, அவரோ... மழு மழுவென மொட்டை போட்டுக் கொண்டு வந்து நிற்கிறார்!

இணையதளங்களிலும், சமூக வலைத் தளங்களிலும் அஜீத்தின் இந்த மொட்டை லுக்தான் பரபரவென பரவி வருகிறது. தாடி மீசை மற்றும் தலைமுடியை வழித்துவிட்டு, தடித்த பிரேம் கண்ணாடியுடன் நண்பர்களுடன் அவர் காட்சி தருகிறார்.

சால்ட் அன்ட் பெப்பர்

சால்ட் அன்ட் பெப்பர்

அஜீத் கடந்த இரு படங்களான மங்காத்தா மற்றும் ஆரம்பம் மற்றும் பொங்கலுக்கு வரும் வீரம் ஆகியவற்றில் டையெல்லாம் அடிக்காமல், தன் ஒரிஜினல் நரைத்த முடி, தாடியுடன் நடித்திருந்தார்.

பெரும் வரவேற்பு

பெரும் வரவேற்பு

அஜீத்தின் இந்த துணிச்சலான முடிவு மற்றும் நிஜமான தோற்றத்துக்கு ரசிகர்களிடம் ஏக ரெஸ்பான்ஸ். அந்தத் தோற்றம் குறித்து எந்த எதிர்க்கருத்தும் இல்லை. எனவே கவுதம் மேனன் படத்திலும் அஜீத் இதே தோற்றத்தைத் தொடருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

திடீர் மொட்டை

திடீர் மொட்டை

ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தல, தன் தலையை மொட்டையடித்துவிட்டு, பளிச்சென்று சிரித்துக் கொண்டு நிற்கிறார்.

மொட்டைக்கும் செம வரவேற்பு

மொட்டைக்கும் செம வரவேற்பு

ஆனால் அவர் நேரம் பாருங்கள், தல இது சூப்பர் தல என்று கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள் ரசிகர்கள்.

ஏன் இந்த முடிவு

ஏன் இந்த முடிவு

வீரம் படத்துக்குப் பிறகு கொஞ்ச நாள் வெளிநாடுகளில் ஜாலியாக சுற்றப் போகிறார் அஜீத். மேலும் கவுதம் மேனன் படம் தொடங்க எப்படியும் மூன்று மாதங்களுக்கு மேல் பிடிக்கப் போகிறது. அதற்குள் முடியும் வளர்ந்துவிடும் என்பதால் மொட்டை போட்டுவிட்டார் அஜீத் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X