ஹெல்மெட்டுடன் குட்டி தல… இணையத்தில் வைரலாகும் அஜித் மகன் ஆத்விக் போட்டோஸ் !

சென்னை : தல அஜித் குமார் அவரது மகனுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான அஜித் - ஷாலினிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

பெரும்பாலும் குழந்தைகளை சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வருவதை தவிர்க்கும் அஜித். தங்களது மீது விழுந்த ஸ்பார்ட் லைட் வெளிச்சம், குழந்தைகள் மீது விழக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்.

வலிமை

வலிமை

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை விடுமுறையில் இப்படம் வெளியாக உள்ளது.

பைக் சுற்றுப்பயணம்

பைக் சுற்றுப்பயணம்

வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் அஜித் அடுத்த படத்தை தொடங்குவதற்கு முன் தனது நீண்ட நாள் கனவான உலகம் முழுவதும் பைக்கில் சுற்றும் பயணத்தை அஜித் தொடங்கிவிட்டார்.

வாகா எல்லையில்

வாகா எல்லையில்

இந்தியா - பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லைக்குச் சென்ற அஜித், அங்கு தேசியக்கொடி ஏந்தி நின்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகின. அதேபோல தார்பாலைவனத்திலும், மலை உச்சியிலும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன.

குட்டி தல

குட்டி தல

ஷூட்டிங் இல்லாத நாட்களில், பெரிதாக வெளியில் தலை காட்டாமல் இருந்த தல அஜித் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் அதிகம் பார்க்க முடிகிறது. அந்த வகையில், தல அஜித் தனது மகன் ஆத்விக் உடன் இணைந்திருக்கும் புதிய புகைப்படமும் வெளியாகி ட்ரெண்டாகி உள்ளது. அதில் ஆத்விக் வருங்கால பைக் சாம்பியன் போல் தந்தையின் ஹெல்மேட்டை அணிந்து கொண்டு பக்காவாக போஸ் கொடுத்துள்ளார். அவரின் அருகில் அஜித் நிற்கிறார். இந்த புகைப்படத்தை அஜித்தின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X