Ajith & Vijay: விஜய்யா.. இல்ல AK-வா? CSK மேட்ச்ல நடந்த சம்பவம்.. தரமான எடிட்டிங் நண்பா.. Fire வீடியோ!

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மத்தியில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் விஷயம் என்றால் அது, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியை தல அஜித் நேரடியாக பார்க்க வந்ததுதான். இந்த போட்டியில் தல தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவினாலும், ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் ஆறுதலாக உள்ள விஷயம் தல அஜித்தை நேரில் பார்த்தாச்சு என்பதுதான். இந்நிலையில் இணையவாசிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அஜித் மற்றும் விஜய் இருப்பது போல் எடிட் செய்து வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்கள். அது வேகமாக பரவி வருகிறது.

சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று அதாவது, ஏப்ரல் 25ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 154 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் அணி பவர்ப்ளேவில் முக்கிய விக்கெட்டுகளை இழந்தாலும், அதன் பின்னர் சிறப்பாக விளையாடி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 155 ரன்கள் சேர்த்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி மீண்டும் புள்ளிப் பட்டியலில் 10 வது இடத்தில் உள்ளது. மேலும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.

Ajith Kumar And Vijay Spotted CSK Match Fans Edited Mass Video Goes High

அஜித்: போட்டியை பார்க்க அஜித் வந்திருந்தார். அதுவும் அவரது குடும்பத்துடன் வந்திருந்தார். இது மட்டும் இல்லாமல், நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் வந்திருந்தார். அஜித், சிவகார்த்திகேயன் மற்றும் அவர்களின் குடும்பங்களின் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் இணையவாசிகள் அஜித் நேற்று போட்டியை பார்க்க வந்ததையும், விஜய்யின் கோட் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியையும் இணைத்து வீடியோவாக எடிட் செய்து வெளியிட்டுள்ளார்கள். அந்த வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Ajith Kumar And Vijay Spotted CSK Match Fans Edited Mass Video Goes High

விஜய்: அதாவது விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படம் கோட். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவது போல உருவாக்கப்பட்டிருக்கும். இதில் நடிகர் விஜய் பரபரப்பாக மைதானத்திற்குள் வரும் காட்சி, அதன் பின்னர் அவர் மைதானத்தில் வில்லன் விஜய்யை தேடும் காட்சியை எடுத்து அதை அஜித் நேற்றைய போட்டிக்கு வந்த காட்சிகளுடன் இணைத்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.

Ajith Kumar And Vijay Spotted CSK Match Fans Edited Mass Video Goes High

வீடியோ: அதாவது இந்த வீடியோவில் விஜய், அஜித்தை பார்த்து ஷாக் ஆகிறார். இது மட்டும் இல்லாமல் அஜித் விஜய்யை பார்த்து மிகவும் கூலாக ஹாய் சொல்கிறார் என்பது போல உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை எடிட் செய்தவருக்கு ரசிகர்களும் இணையவாசிகளும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் குஷியில் உள்ளார்கள். இது போன்ற ஒரு காட்சி படத்தில் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் எனவும் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்

More from Filmibeat

Read more about: ajith kumar vijay thala thalapathy ipl
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X