மோகன்லாலுக்கு தல அஜித் கொடுத்த சர்ப்ரைஸ்... இணையத்தில் வைரலாகும் வீடியோ !

சென்னை : நடிகர் அஜித் மோகன்லாலுடன் இருக்கும் புதிய வீடியோவை மரக்கார் படக்குழு யூடியூப்பில் வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்று வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். சினிமாத்துறையில் கோடிகளில் பிஸ்னஸ் கொடுக்கும் அஜித், கோடிக்கணக்கான ரசிகர்களையும் கொண்டுள்ளார்.

வலிமை

வலிமை

நடிகர் அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார். ஏற்கனவே அஜித் ஹெச் வினோத் கூட்டணியில் நேர் கொண்ட பார்வை படத்தை தயாரித்து இருந்தார் போனி கபூர்.

பொங்கலுக்கு ரிலீஸ்

பொங்கலுக்கு ரிலீஸ்

வலிமை திரைப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமை திரைப்படம், ஃபேமிலி பேக்டு ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. ஜனவரி மாதம் பொங்கல் திருநாளுக்கு இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

Thala Ajith from a biking trip in Sikkim goes viral
திடீர் விசிட்

திடீர் விசிட்

இந்நிலையில், நடிகர் அஜித்,மோகன்லால் நடிக்கும் மரக்கார் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது திடீரென விசிட் அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை அஜித்தின் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்

மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் , பிரியதர்ஷன் இயக்கத்தில் மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மோகன்லாலின் மகன் பிரனவ் மோகன்லால், பிரியதர்ஷனின் மகள் பிரியாகிருஷ்ணன், கீர்த்தி சுரேஷ், சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். 16ஆம் நூற்றாண்டில் இருந்த குஞ்சாலி மரைக்காயர் என்பவரின் வரலாற்றை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகி உள்ளது.

85 கோடி

85 கோடி

இத்திரைப்படம் சுமார் 85 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உள்ளது இப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகுமா? அல்லது ஓடிடியில் ரிலீசாகுமா? என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X