twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரசிகர்கள்… வெறுப்பாளர்கள்… நடுநிலையாளர்கள்… நாணயத்தின் 3 பக்கங்கள்… அஜித் அறிக்கை!

    |

    சென்னை : திரைத்துறையில் நுழைந்து 30 வருடங்கள் நிறைவு செய்வதையெட்டி நடிகர் அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அஜித் திரையுலகில் வெற்றிகரமாக 29 ஆண்டுகளை நிறைவு செய்து 30வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.

    இதனை ரசிகர்கள் படுஅமர்களமாக கொண்டாடி வரும் நிலையில், அஜித் அறிக்கையை வெளியிட்டு ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

     வலிமை திரைப்படத்தில் அஜித் கதாபாத்திரத்தின் பெயர் என்ன தெரியுமா ? வலிமை திரைப்படத்தில் அஜித் கதாபாத்திரத்தின் பெயர் என்ன தெரியுமா ?

    சினிமா பின்னணி இன்றி

    சினிமா பின்னணி இன்றி

    எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடுமையான உழைப்பினாலும், விடாமுயற்சியினாலும் சினிமா உலகில் இந்த அளவிற்கு வளர்ந்து உள்ளார் தல அஜித். இவர் இந்தியாவில் உள்ளார். உலக அளவிலும் ரசிகர்களை கொண்டுள்ளார் அஜித். நடிப்பில் மட்டும் இல்லாமல் பல துறைகளில் சாதனை புரிந்து வருகிறார்.

    பள்ளி மாணவனாக

    பள்ளி மாணவனாக

    அஜித் நடித்த முதல் படம் அமராவதி என்று தான் அனைவருக்கும் தெரியும். ஆனால், இயக்குனர் செண்பக ராமன் இயக்கத்தில் வெளிவந்த "என் வீடு என் கணவர்" என்ற படத்தில் அஜித் பள்ளி மாணவனாக முதல் முதலில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் வரும் என் கண்மணி என்ற பாடலில் சைக்கிளில் வரும் பள்ளி மாணவனாக அஜித் குமார் நடித்து உள்ளார்.

    ஏராளமான வெற்றி படங்கள்

    ஏராளமான வெற்றி படங்கள்

    அதன் பிறகு, தான் தமிழில் அமராவதி என்ற படத்தில் நடித்தார். இப்படத்தைத் தொடர்ந்து காதல் கோட்டை, காதல் மன்னன், அவள் வருவாளா, வாலி, அமர்க்களம், நீ வருவாய் என, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பூவெல்லாம் உன் வாசம், ரெட், வரலாறு, கிரீடம், பில்லா, மங்காத்தா, பில்லா 2, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், வேதாளம், விஸ்வாசம் என்று பல சூப்பர் ஹிட் காதல், குடும்ப கதைகளை மையமாகக் கொண்ட படங்களில் நடித்து சினிமா உலகில் மாஸ் ஹீரோவாக வளர்ந்து உள்ளார்.

    கண்ணான கண்ணே

    கண்ணான கண்ணே

    விஸ்வாசம் திரைப்படத்தில் தூக்குதுரை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதையும் அள்ளிய அஜித். அப்பா மகள் பாசத்தை அழகாக காட்டி மனதில் நீங்கா இடம் பிடித்தார். இப்படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்ணே கண்ணான கண்னே பாடல் அனைவரின் விருப்பப்பாடலாக உள்ளது.

    வழக்கறிஞராக

    வழக்கறிஞராக

    இத்திரைப்படத்தை அடுத்து நேர்கொண்டப்பார்வை வழக்கறிஞராக நடித்திருந்தார் அஜித். மேலும், பெண்கள் உரிமைப்பற்றி பேசும் திரைப்படமாக இப்படம் அமைந்திருந்தது. இப்படத்தில் குறிப்பாக அஜித் பேசிய நோ மீன்ஸ் நோ வசனம் பெண்களை மிகவும் கவர்ந்தது. இருந்தாலும், மாஸ் ஹீரோ அஜித் இப்படி அமைதியாக வந்ததை அஜித் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

    ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ்

    ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ்

    தற்போது அஜித் எச் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அஜித் இதற்கு முன்பாக மங்காத்தா மற்றும் என்னை அறிந்தால் திரைப்படங்களிலும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அதே போல இந்த திரைப்படத்திலும் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். அவர் கதாபாத்திரத்தின் பெயர் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்று கூறப்படுகிறது.

    வேறமாறி கொண்டாடினர்

    வேறமாறி கொண்டாடினர்

    வலிமை படத்தின் வேறமாதிரி பாட வெளியான சில மணி நேரத்திலேயே 2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து. இதை படக்குழுவினர் போஸ்டராக வெளியிட்டனர். மேலும், அஜித் சினிமாவில் நடிக்க வந்து 30 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அதே நாளில் இந்த பாடல் வெளியானதால் அவரின் ரசிகர்கள் இதை வேறமாறி கொண்டாடினர்.

    வாழு வாழவிடு

    வாழு வாழவிடு

    வலிமை படத்தின் முதல் பாடலான இந்த பாடல், அஜித் எப்போதும் சொல்லும் வார்த்தைகளை வைத்து பாடலை எழுதியுள்ளார் விக்னேஷ் சிவன், குடும்பத்தை பாருங்கள், எண்ணம் போல் வாழ்க்கை, வாழு வாழவிடு என ரசிகர்களுக்கு அறிவுரை கூறுவது போல இந்த பாடல் அமைந்துள்ளது. இப்பாடலை, யுவன்சங்கர் ராஜா மற்றும் அனுராக் குல்கர்னியும் இணைந்து பாடி உள்ளனர்.

    ரசிகர்கள் நாணயத்தில் 3 பக்கங்கள்

    ரசிகர்கள் நாணயத்தில் 3 பக்கங்கள்

    இந்நிலையில் நடிகர் அஜித், திரைத்துறையில் நுழைந்து 30 வருடங்கள் நிறைவு செய்வதையெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையை பி.ஆர்.ஓ சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ரசிகர்கள், வெறுப்பவர்கள், நடுநிலையாளர்கள் ஆகியோர் ஒரே நாணயத்தின் 3 பக்கங்கள், ரசிகர்களின் அன்பையும், வெறுப்பாளர்களிடமிருந்து வெறுப்பையும், நடுநிலையாளர்களின் பக்க சார்பற்ற பார்வைகளையும் நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன். வாழு வாழ விடு, எதிர்பார்ப்பு இல்லாத அன்பு எப்போதும் என்று அந்த அறிக்கையில் அஜித் கூறியுள்ளார். அஜித் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    English summary
    Ajith's powerful statement vide his PRO Suresh Chandra reads "Fans, Haters & Neutrals are 3 sides of the same coin. I graciously accept the Love from fans, the hate from the haters & the unbaised views of the Neutrals. Live & Let live! Unconditional Love Always
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X