பாலிவுட், டோலிவுட்டுக்கும் படையெடுக்கும் 'தல'யின் வலிமை படம்!

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் பொங்கலையொட்டி வெளியாக உள்ளது வலிமை படம்.

இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்க ஹெச் வினோத் இயக்கியுள்ளார்.

தற்போது இந்தப் படம் இந்தி மற்றும் தெலுங்கிலும் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

'தல' அஜித்குமார்

'தல' அஜித்குமார்

நடிகர் அஜித்குமார் இந்திய அளவில் மிக பிரபலமான நடிகராக உள்ளார். தொடர்ந்து சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நடிப்பில் மட்டுமின்றி, பைக் ரேசிங் உள்ளிட்டவற்றிலும் இவருக்கு அதீத விருப்பம் காணப்படுகிறது. அவ்வப்போது இத்தகைய போட்டிகளில் கலந்து கொள்கிறார்.

நேர்கொண்ட பார்வை படம்

நேர்கொண்ட பார்வை படம்

இவரது முந்தைய படமான நேர்கொண்ட பார்வை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. இதில் வழக்கறிஞராக நடித்திருந்தார் அஜித். விருப்பம் இல்லாத பெண்ணை தொடுவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதை மையப்படுத்தி இந்தப்படம் வெளியானது.

பிங்க் படத்தின் ரீமேக்

பிங்க் படத்தின் ரீமேக்

இந்தியில் பிங்க் என்ற பெயரில் அமிதாப் பச்சன் நடித்திருந்த இந்தப் படம் தமிழில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்து ஹெச் வினோத் இயக்கியிருந்தார். தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் இணைந்துள்ளது.

வலிமை படம்

வலிமை படம்

இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டர்கள், டீசர் ஆகியவை வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. மேலும் படத்தை முடித்துவிட்டு நடிகர் அஜித் தன்னுடைய பைக்கில் வாகா எல்லை உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற புகைப்படங்களும் ட்ரெண்டானது.

இந்தி, தெலுங்கிலும் ரிலீஸ்

இந்தி, தெலுங்கிலும் ரிலீஸ்

அஜித்திற்கு இந்திய அளவில் ரசிகர்கள் காணப்படுகின்றனர். பாலிவுட்டில் அவர் நேரடியாக படங்களில் நடித்துளளார். இந்நிலையில் வலிமை படத்தை இந்தி மற்றும் தெலுங்கிலும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended Video

Thala Ajith & Dhanush-க்கு இவ்ளோ பெரிய பசங்களா | Anoushka Ajith, Yatra dhanush
இந்தி டப்பிங் பணிகள் துவக்கம்

இந்தி டப்பிங் பணிகள் துவக்கம்

படத்தின் இந்தி டப்பிங் பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இந்தப் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்கு மிகுதியான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X