Don't Miss!
- Sports IPL 2024 CSK : உங்களுக்கு வேற வேலையே இல்லையா.. நிம்மதியா இருக்க விடுங்க.. அடிக்க வந்த தோனி
- News இந்தியாவில் எந்த ஜாதி, மத மக்களிடம் அதிக தங்கம் இருக்கு தெரியுமா? டாப்பில் இவங்களா? முழு டேட்டா
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ரஷ்யாவில் 5000 கி.மீ., பைக் டிராவல் செய்த நடிகர் அஜித்.. நிஜமாவே நீங்க வேற மாறி தான் தல!
சென்னை: வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை ரஷ்யாவில் முடித்த தல அஜித் அங்கே பைக் டிராவல் செய்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
ஏற்கனவே ஹைதரபாத்தில் படப்பிடிப்பில் இருந்த போது நடிகர் அஜித் சைக்கிளில் ஊர் சுற்றிய புகைப்படங்கள் வைரலானது.
அந்த இடத்தில் டாட்டூ…. ரசிகர்களுக்கு காட்டி மிரளவைத்த நடிகை !
இந்நிலையில், ஹெல்மெட் மற்றும் பைக் சூட் அணிந்து கொண்டு அஜித் இருக்கும் புகைப்படங்கள் தல ரசிகர்களை கொண்டாட்ட மோடுக்கு கொண்டு சென்றுள்ளன.
முடிந்தது படப்பிடிப்பு
கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக இயக்குநர் எச். வினோத், தல அஜித் உள்ளிட்ட வலிமை படக்குழுவினர் ரஷ்யா சென்றனர். இரண்டு ஆண்டுகளாக நீண்டு கொண்டே சென்ற வலிமை படப்பிடிப்பு ஒரு வழியாக முடிவுக்கு வந்து படக்குழுவினர் மீண்டும் சென்னைக்கு நேற்று திரும்பினர்.
5000 கி.மீ.,
டிராவல் ஃப்ரீக்கான தல அஜித் ரஷ்யாவையும் ஒரு ரவுண்டு அடித்து விடுவோமே என நினைத்து பைக்கிலேயே சுமார் 5 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் ரஷ்யாவில் பைக் டிராவல் செய்துள்ள வேற மாறி தகவல் மற்றும் அதன் புகைப்படங்கள் வெளியாகி தல ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.
தல தரிசனம்
தல அஜித்தின் தரிசனத்திற்காக ஏகப்பட்ட ரசிகர்கள் காத்துக் கிடக்கும் நிலையில், ரஷ்யாவை சுற்றி 5 ஆயிரம் கி.மீ., பைக் டிராவல் செய்த நடிகர் அஜித்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகின்றன. செம ஹேண்ட்ஸமாக சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலிலேயே நடிகர் அஜித் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
சைக்கிள் ஓட்டிய தல
இந்தியாவில் படப்பிடிப்பில் இருக்கும் போது தல அஜித் சைக்கிள் ஓட்டிய புகைப்படங்கள் தல அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வைரலாகின. பைக், கார், சைக்கிள், ட்ரோன் என அனைத்திலும் அதிக ஆர்வம் கொண்ட நடிகர் அஜித் சமையல், போட்டோகிராஃபி மற்றும் தோட்டக் கலையிலும் வல்லவர்.
வலிமை திருவிழா ஆரம்பம்
வலிமை படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துள்ள நிலையில், தல அஜித்தின் புகைப்படங்கள் ஒவ்வொன்றாக கசியத் தொடங்கியதில் இருந்தே வலிமை திருவிழா ஆரம்பமாகி விட்டது உறுதியாகி உள்ளது. விரைவில் வலிமை பட டீசர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த ஹாட் அப்டேட்கள் தல ரசிகர்களை உற்சாகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.