தல பிறந்தநாள்: ட்விட்டரை தெறிக்க விட்ட ரசிகர்கள், டிரெண்டாகும் 3 ஹேஷ்டேகுகள்
சென்னை: இன்று பிறந்தநாள் கொண்டாடும் அஜித்துக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகின்றது.
அஜித் இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த காரணத்தால் #HBDThala #HappyBirthdayThala, #ThalaAjith ஆகிய ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளன.
தல
அஜித்துக்கு சிவகார்த்திகேயன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேவிஸ்ரீ பிரசாத்
இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தான் அஜித்துடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.
வேதாளம்
வேதாளம் பட வில்லன் ராகுல் தேவ் அஜித்தை வாழ்த்தி ட்வீட் செய்துள்ளார்.
அனிருத்
இசையமைப்பாளர் அனிருத் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
கேரளா
அஜித்துக்கு பிற நடிகர்களின் ரசிகர்களும், பிற மாநில ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications