தல ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் சிவா
Recommended Video

சென்னை: இயக்குனர் சிவா அஜித் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறார்.
பொங்கல் ரேஸில் அடுத்தடுத்து படங்கள் சேர்ந்து கொண்டிருக்கிறது. சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வரும் என்று அறிவித்ததோடு சரி அடுத்து எந்த அப்டேட்டும் இல்லை.
இந்நிலையில் பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட, சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன், ஆர்.ஜே. பாலாஜியின் எல்.கே.ஜி. ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.

கடுப்பு
இயக்குனர் சிவா ட்விட்டர் பக்கமே வருவது இல்லை. விஸ்வாசம் குறித்து அவர் ஏதாவது அப்டேட் கொடுப்பார் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாறுவதே தல ரசிகர்களுக்கு வழக்கமாகிவிட்டது. சிவா தல ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறார்.

தயாரிப்பாளர்
இயக்குனர் தான் அப்டேட் கொடுக்கவில்லை என்று பார்த்தால் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸும் கம்முன்னு இருக்கிறது. அவர்கள் கம்முன்னும், உம்முன்னும் இருப்பது அஜித் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. ஒரு அப்டேட் தான்யா கேட்கிறோம், கொடுத்தால் என்ன என்று கெஞ்சாத குறையாக கேட்கிறார்கள்.
விஸ்வாசம்
பேட்ட வருவதால் விஸ்வாசம் தள்ளிப் போகுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதை தான் இப்படி ஒரு ட்வீட் போட்டு விஸ்வாசம் பொங்கலுக்கு வந்தே ஆகணும் என்கிறார்கள் ரசிகர்கள்.
சிவா
பொங்கலே வந்தாலும் வாயை திறக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறாரே இந்த சிவா.


Click it and Unblock the Notifications











