அசத்தல் ‘ஆரம்பம்’... முன்கூட்டியே ‘தல’ தீபாவளி கொண்டாடிய சிம்பு

சென்னை: இன்று ரிலீசாகியுள்ள ஆரம்பம் படத்தைப் பார்த்து படம் சூப்பர் என அஜீத்தின் நடிப்பை புகழ்ந்து தள்ளியுள்ளார் சிம்பு.

அஜீத் நடிப்பில் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் உருவான ஆரம்பம் படம், இன்று நிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்தை இன்று அதிகாலைக் காட்சியான 5.30 மணி ஷோவில் பார்த்து ரசித்துள்ளார் சிம்பு.

படத்தைப் பார்ப்பதற்கு முன்னதாகவும், படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போதும், படத்தைப் பார்த்து முடித்தப் பின்னரும் என தனது கமெண்ட்களை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் சிம்பு.

இதோ அவை உங்களது பார்வைக்கு....

தீபாவளி...தல தீபாவளி

தீபாவளி...தல தீபாவளி

கடந்த 27ம் தேதியே அஜீத்தின் ஆரம்பத்திற்கான டிக்கெட்டைப் பதிவு செய்து விட்டாராம் சிம்பு. அது குறித்தான கமெண்டில், ‘எனது டிக்கெட்டைப் பதிவு செய்து விட்டேன். எனக்கு மட்டும் 31ந்தேதியே தீபாவளி. படத்தைப் பார்ப்பதற்குக் காத்திருக்க இயலவில்லை' என தன் ஆர்வத்தைத் தெரிவித்துள்ளார்.

விசிலடிக்கணும்....

விசிலடிக்கணும்....

நாலு மணிக்கு ஷூட்டிங் முடிந்ததும், 5 மணிக்கெல்லாம் தலப் படத்தை பார்க்க சென்று விட வேண்டும் என முன் கூட்டியே திட்டமிட்டு விட்டாராம் சிம்பு. அது குறித்தான கமெண்டில், ‘நாலு மணிக்கு ஷூட்டிங் முடிஞ்சதும், நேரா 5 மணிக்கு தியேட்டருக்கு செல்ல வேண்டும். விசிலடிக்கக் காத்துக் கொண்டிருக்க இயலவில்லை' எனக் குறிப்பிட்டுள்ளார்.

டூப்பர் ஹிட்....

டூப்பர் ஹிட்....

அதற்கு அடுத்ததில், ‘படம் நிச்சயம் ஹிட் ஆகும். அஜீத் படத்தைத் தாங்கிப் பிடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜாவின் பிண்ணனி இசை சூப்பர்... காசி தியேட்டர் அட்டகாசம்...' என கமெண்ட் போட்டுள்ளார்.

இப்போதான் திருப்தி...

இப்போதான் திருப்தி...

கடைசியாக, ‘கிட்டத்தட்ட தியேட்டரில் இருந்து வெளியே வர 30 நிமிடங்கள் ஆனது. ரசிகர்களின் அன்பிற்கு நன்றி. படத்தைப் பார்த்து விட்ட திருப்தியில் இனி போய் நிம்மதியாகத் தூங்கவேண்டும்' என தெரிவித்துள்ளார் சிம்பு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X